கவாஸ்கி நின்ஜா 300 பைக் ரூ 3.5 இலட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்பொழுது விற்பனையில் இருந்து வரும் 250 சிசி பைக்கிற்க்கு மாற்றாக புதிய கவாஸ்கி நின்ஜா 300 பைக் வெளிவந்துள்ளது.
296 சிசி திரவ மூலம் குளிர்விக்கப்படும் இரண்டு சிலிண்டர் கொண்ட பேரலல் டிவின் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 வால்வ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 39 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 27 என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
7 விநாடிகளில் 0 முதல் 100 கிமீ வேகத்தினை தொடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 175 கிமீ ஆகும்.
மிக நேர்த்தியான முறையில் நின்ஜா 300 வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 ஸ்போக் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர். ரைடரை எஞ்சின் வெப்பம் தாக்காதுவாறு நின்ஜா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ்வுடன் 174 கிலோ எடை கொண்டது. 37 மிமி டெலஸ்கோபிக் சஸ்பென்ஷன் முன்புறத்தில் பயன்படுத்தியுள்ளனர். பின்புறத்தில் 5 ஸ்பீடு யூனி-டிராக் சஸ்பென்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சைன்களில் மண் மற்றும் சகதிகள் பரவாமல் இருப்பதற்க்காக டபூள் கவர் என பல வசதிகளை கொண்டது. கவாஸ்கி இசட்எக்ஸ் ஆர் பைக்கினை அடிப்படையாக கொண்ட முகப்பு விளக்குகள் என அசத்தலாக உள்ளது.
கவாஸ்கி நின்ஜா 300 பைக்கின் விலை ரூ 3.5 இலட்சம் (தில்லி விலை)