கார் பேட்டரி பராமரிப்பு செய்வது எப்படி ? என சில முக்கிய குறிப்புகளை அறிந்து கொள்ளலாம். உங்கள் பேட்டரி பராமரிப்பு செய்ய தவறினால் சில இன்னல்களுக்கு ஆட்படலாம்.
1. பேட்டரியின் வாட்டர்
டிஸ்டில்டு வாட்டரை சரியான அளவில் பராமரித்தல் மிக அவசியம். டிஸ்டில்டு வாட்டரும் சாதரன தண்ணிரும் ஒன்றல்ல. எனவே டிஸ்டில்டு வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். சரியான வாட்டர் லெவல் பராமரித்தால் பேட்டரின் ஆயுளை நீட்டிக்கலாம்.
2. ஆசிட் சோதனை
பேட்டரியில் பயன்படுத்தப்பட்டுள்ள அமிலத்தை 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை சோதனை செய்யுங்கள். அமிலத்தின் ஸ்பெசிஃபிக் கிராவிட்டினை சோதியுங்கள்.
3. தரமற்ற விளக்குகள்
தரம் குறைவான அல்லது மறுவிற்பனை விளக்குகளை பயன்படுத்தாதீர்கள். தரமற்ற விளக்குகள் அதிகப்படியான பேட்டரி சக்தினை பாதிக்கும்.
4. இனைப்பை துண்டியுங்கள்
ஒரு வாரம் அல்லது அதற்க்கு மேற்ப்பட்ட நாட்கள் காரினை பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி இனைப்பை நீக்கிவிடுங்கள். திரும்ப பயன்படுத்தும் பொழுது இனைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
5. சுத்தம் செய்யுங்கள்.
பேட்டரின் இனைப்பு டெரிமினல்களை தூய்மையாக வைத்திருங்கள்.