Categories: Auto News

கார் விலை உயர்கின்றது – மத்திய பட்ஜெட் எதிரொலி

புதிய கார் வாங்குபவர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ள மத்திய பட்ஜெட் 2016-2017 ஆம் ஆண்டில் அனைத்து கார்களின் விலை உயர்வினை சந்திக்கின்றது. மேலும் சிஎன்ஜி வாகனங்களுக்கும் 1 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.

mahindra-kuv100-explorer-front

சுற்றுச்சூழலை பாதிக்காத எலக்ட்ரிக் கார்களுக்கு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எவ்விதமான அறிவுப்புகளும் இல்லாமல் வந்துள்ளது. மேலும் ஹைபிரிட் வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் ஆட்டோமொபைல்

  1. பெட்ரோல் , எல்பிஜி , சிஎன்ஜி  போன்றவற்றில் இயங்கும் 4 மீட்டருக்கு குறைவான மற்றும் 1200சிசி என்ஜினுக்கு குறைவான மாடல்களுக்கு என அனைத்து விதமான கார்களுக்கும் கூடுதலாக 1 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
  2. டீசல் வாகனங்களுக்கு 4 மீட்டருக்குள் குறைவான நீளம் மற்றும் 1500சிசி க்கு குறைவான என்ஜின் கொண்ட மாடல்களுக்கு கூடுதலாக 2.5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
  3. அனைத்து  எஸ்யூவி கார்கள் , பெரிய செடான் கார்கள் , அதிகபட்ச என்ஜின் சிசி உள்ள கார்களுக்கு கூடுதலாக 4 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
  4. மூன்று சக்கர வாகனங்கள் , எலக்ட்ரிக் வாகனங்கள் , ஹைபிரிட் கார்கள் , ஃப்யூவல் செல் ஹைட்ரஜன் கார் போன்றவைகள் இந்த வரி விதிப்பு பொருந்தாது.

கோல்ஃப் ஆடுகளத்தில் பயன்படுத்தப்படும் வண்டிகளுக்கு 10 % வரி தற்பொழுது அதிகபட்சமாக 60 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் சில 

  • 2016-2017 பட்ஜெட்டில் மொத்தம் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.19. 78 லட்சம் கோடி ஆகும்.
  • நாடு முழுதும் உள்ள சாலைகளை மேம்படுத்த மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில் நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்த ரூ. 55,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விவசாய மேம்பாட்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடி

பட்ஜெட் எதிரொலி காரணமாக பெட்ரோல் விலை ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை ரூ. 1.47 அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும்.

பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த ஆட்டோமொபைல் நிறுவன தலைவர்கள்

பவன் குன்கா மஹிந்திரா & மஹிந்திரா

இந்த வரி தினிப்பு மிகுந்த கவலை அளித்தாலும் நம் நாட்டின் பொருளாதர வளர்ச்சியை கருத்தில் கொண்டு முன்னேடுத்து செல்வோம் . பழைய வாகனங்களுக்கு எதேனும் திட்டங்கள் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வினோத் தசாரி சியாம் தலைவர்

மத்திய பட்ஜெட் மிகப்பெரும் தாக்கத்தை ஆட்டோமொபைல் துறையில் ஏற்படுத்தியுள்ளது. சிறப்பான நிலையில் வாகன விற்பனையும் இல்லாத நிலையில் இந்த வரி உயர்வு மேலும் இது ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும் மிகப்பெரிய பின்னடைவாகும்.

ஸ்டீஃபன் பால்சாஜ் மற்றும் மைக்கேல் பெஞ்ச் ஸ்கேனியா இந்தியா

முக்கியமான பிரச்சனைகளான காற்று மாசுபாடு மற்றும் தூய்மையான இந்தியா போன்ற  பிரதமரின் நோக்கமான புதைப்பொருள் எரிபொருள்களை குறைக்கும் நோக்கில் கழிவுகளை கொண்டு உருவாக்கப்படும் பயோஃப்யூவல் எரிபொருளின் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த சலுகைகளும் இல்லை.

 

மேலும் வரும் இணைந்திருங்கள்…

 

 

Recent Posts

ஆடம்பர கார்களுக்கு எம்ஜி செலக்ட் டீலரை துவங்கும் ஜேஎஸ்டபிள்யூ..!

ஜேஎஸ் டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் ஆடம்பர கார்களுக்கு மற்றும் பிரத்தியேகமான நியூ எனர்ஜி வாகனங்கள் விற்பனை செய்வதற்கு எம்ஜி…

16 hours ago

160கிமீ ரேஞ்ச் வழங்கும் 2024 ரிவோல்ட் RV400 அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான RV400 எலெக்ட்ரிக் பைக்கில் விரைவு சார்ஜர் வசதியுடன் முந்தைய மாடலை விட கூடுதலாக 10…

21 hours ago

இந்தியாவில் ஹோண்டாவின் 300-350cc பைக்குகள் ரீகால் அழைப்பு

கேம் ஷாஃப்ட் மற்றும் வீல் ஸ்பீடு சென்சாரில் ஏற்பட்டுள்ள கோளாறுகளை சரி செய்வதற்காக ஹோண்டா இந்தியா நிறுவனம் தனது 300…

1 day ago

முதல் நாளில் 1,822 முன்பதிவுகளை அள்ளிய கியா கார்னிவல்..!

கியா நிறுவனத்தின் ஆடம்பர மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள 2024 கார்னிவல் எம்பிவி மாடலின் முன்பதிவு துவங்கப்பட்ட முதல் நாளிலே…

1 day ago

டிரையம்ப் ஸ்பீடு T4 Vs ஸ்பீடு 400 வித்தியாசங்கள் என்ன..!

டிரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ள குறைந்த விலை ஸ்பீடு T4 மாடல் மற்றும் ஏற்கனவே விற்பனையிலிருந்து தற்போது…

2 days ago

ரூ.84,990 விலையில் ரிவோல்ட் RV1, RV1+ இ-பைக் விற்பனைக்கு அறிமுகமானது

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல் RV1 மற்றும் RV1 பிளஸ் என இரண்டு மாடல்கள் விற்பனைக்கு…

2 days ago