ஸ்கோடா சூப்பர்ப்
யூரோ என்சிஏபி மையத்தில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட் சோதனையில் புதிய ஸ்கோடா சூப்பர்ப் கார் பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் முக்கிய பாகங்களின் பாதிப்பு போன்ற அம்சங்களில் 86 % பாதுகாப்பினை பெற்றுள்ளது. மேலும் கழுத்து பகுதி மற்றும் முன்பக்க பயணிகளுக்கு நல்ல பாதுகாப்பினை வழங்குகின்றது.
ஸ்கோடா சூப்பர்ப் குழந்தைகளுக்கான பாதுகாப்பிலும் சிறப்பான பாதுகாப்பு முன் மற்றும் பக்கவாட்டிலும் சிறப்பான பாதுகாப்பினை தந்து 86 % மதிப்பினை பெற்றுள்ளது.
பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 71 % பாதுகாப்பினை அளிக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காக 76 % மதிப்பை பெற்று மொத்த 5 நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்த்தை ஸ்கோடா சூப்பர்ப் பெற்றுள்ளது.
ஹூண்டாய் ஐ20
யூரோ என்சிஏபி மையத்தில் நடத்தப்பட்ட கிராஷ் டெஸ்ட் சோதனையில் புதிய ஹூண்டாய் ஐ 20 கார் பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் முக்கிய பாகங்களின் பாதிப்பு போன்ற அம்சங்களில் 85 % பாதுகாப்பினை பெற்றுள்ளது. சதவீதம் குறைய காரணம் பக்கவாட்டு காற்றுப்பைகள் திறக்கவில்லை.
ஹூண்டாய் ஐ 20 குழந்தைகளுக்கான குறைவான பாதுகாப்பினை பெற்றுள்ளதுமுன் மற்றும் பக்கவாட்டிலும் 73 % மதிப்பினை பெற்றுள்ளது.
பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் 79 % பாதுகாப்பினை அளிக்கின்றது. பாதுகாப்பு அம்சங்களுக்காக 64 % மதிப்பை பெற்று மொத்த 4 நட்சத்திர பாதுகாப்பு அந்தஸ்த்தை ஹூண்டாய் ஐ 20 பெற்றுள்ளது.
New Skoda Superb awarded 5 Star Euro NCAP ratings and Hyundai i20 awarded 4 Star Euro NCAP ratings.