குறைந்த விலை பைக் தயாரிக்கும் ஹீரோ மோட்டோகார்ப்

0

உலகின் முதன்மையான மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ரூ. 30,000 விலைக்குள் குறைவான மோட்டார்சைக்கிளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மிக அதிகப்படியான விற்பனை இலக்கினை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது.

2015-Hero-Splendor-

தற்பொழுது விற்பனையில் உள்ள மோட்டார்சைக்கிள்களில் பஜாஜ் CT100B மட்டுமே விலை குறைவானதாகும். இதன் விலை ரூ.32, 668 ஆகும். ஹீரோ நிறுவனத்தின் ஹெச்எஃப் டான் ரூ.39,470 ஆகும். இதுவே ஹீரோ நிறுவனத்தின் விலை குறைவான பைக்காகும்.

மேலும் படிக்க ; பஜாஜ் CT100B முக்கிய விபரங்கள்

இதனைவிட விலை குறைவாகவும் அதிக மைலேஜ் தரும் வகையிலும் , அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நோக்கிலும் இந்த மோட்டார்சைக்கிள் இருக்கும் என கூறப்படுகின்றது.

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் மிகவும் விலை குறைவான மோட்டார்சைக்கிள் தயாரிக்கும் பணியில் மிக தீவரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த வருடத்தில் இந்த பைக் விற்பனைக்கு வரலாம். அதனை தொடர்ந்து ஹீரோ நிறுவனமும் குறைந்த விலை மோட்டார்சைக்கிளை களமிறக்கும்.