கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார் விரைவில் சோதனை ஓட்டம் நடத்த உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. எவ்விதமான இயக்க கருவிகளும் இல்லாம்ல் கேமிரா மற்றும் சென்சார் மூலம் இயங்கும் முழுமையான தானியங்கி காராகும்.
கூகுள் தானியங்கி காரின் அமைப்பு |
ஆட்டோமொபைல் துறையில் புதிய பரினாமத்தில் உருவாகி வரும் தானியங்கி கார்களில் ஸ்டீரியங், பிரேக் பெடல், ஆக்சிலேட்டர் போன்ற எவ்விதமான பாகங்களும் இல்லாமால் தன்னை தானே இயக்கிக் கொள்ளும் முழுமையான தானியங்கி காரினை வடிவமைத்துள்ளனர்.
ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான்களை மட்டுமே கொண்டிருக்கும். நாம் செல்ல வேண்டிய கூகுள் வரைபடத்தின் மூலம் தேர்வு செய்தால் போதுமானது தானாகவே வழியினை தேர்வு செய்து கொண்டு நாம் செல்ல வேண்டிய இடத்திற்க்கு கூகுள் தானியங்கி கார் செல்ல உதவும்.
ஸ்மார்ட்போன்களை போல இந்த தானியங்கி கார்களை புழக்கத்தில் கொண்டு வர கூகுள் திட்டமிட்டுள்ளது.
Google self-driving car in test drive