உலக இணையோட்டத்தின் இதயமாக செயல்படும் கூகுள் நிறுவனத்தின் தானியங்கி கார் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் கூகுள் வேமோ என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் வேமோ நிறுவனம் தானியங்கி முறையில் இயங்கும் கார்களை தயாரிக்க உள்ளது.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக சோதனை ஓட்டத்தில் உள்ள கூகுள் தானியங்கி கார் விரைவில் உற்பத்தி நிலையை எடுவதற்கான முயற்சிகளை கூகுள் நிறுவனம் முன்னெடுத்து வருகின்றது. அதன் தொடக்கமாக சில மாதங்களுக்கு முன்னதாக ஃபியட் கிறைஸலர் குழுமத்தின் வாயிலாக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது.
உலகின் முதல் தானியங்கி கார் நுட்பத்தினை வடிவமைத்து வரும் கூகுள் நிறுவனம் இதுவரை இந்த காரின் புரோட்டைப் மாடலை 20 லட்சம் கிலோமீட்டர்களுக்கு மேல் சோதனை செய்துள்ளது. பலதரப்பட்ட இடங்களில் இந்த தானியங்கிகார் சோதிக்கப்பட்டுள்ளது.
கூகுள் வேமோ
வேமோ நிறுவத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள John Krafcik கூறுகையில் விரைவில் இந்த தொழிற்நுட்பம் எண்ணற்ற மக்களை சென்றயடைய உள்ளது என தெரிவித்துள்ளார். வேமோ (WAYMO) என்றால் “A new way forward in mobility,” என்பது விளக்கமாகும்
மேலும் கடந்த அக்டோபர் 2015 பார்வையற்ற ஒருவரை காரில் அமர வைத்து ஆஸ்டின் ,டெக்ஸாஸ் போன்ற மாகாணங்களில் முழுமையான தானியங்கி முறையால் இயங்கு வகையில் கார் சோதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்டமாக 100 மினி வேன்களை ஃபியட் நிறுவனம் கூகுளின் தானியங்கி கார் நுட்பத்தினை கொண்டு வடிவமைத்து விரைவில் பொது போக்குவரத்து சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
மேலும் படிக்க : கூகுள் கார் கழுதை மேல் மோதியதா ?