கேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் பைக்

0
கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் மிக சிறப்பான வளர்ச்சினை எட்டி வருகின்றது. இந்தியாவின் மிக விரைவாக விற்பனையாகும் பிரிமியம் பைக் என்றால் கேடிஎம் டியூக் 200 பைக் ஆகும்.

சமீபத்தில் தில்லியில் நடந்த ஆரஞ்சு தினத்தில் கேடிஎம் 1190 ஆர்சி8 ஆர் பைக்கினை பார்வைக்கு வைத்திருந்தது. தில்லியில் முதல் முறையாக கேடிஎம் ஆரஞ்சு தினத்தை கொண்டாடியது. இந்த தினத்தில் கேடிஎம் பைக் உரிமையாளர்கள் மற்றும் ஆர்வலகள் என பலர் பங்கேற்றனர்.

ktm+rc8+r

கேடிஎம் 1190  ஆர்சி8 ஆர்  பைக் தற்பொழுது நாடு முழுவதும் உள்ள முன்னணி கேடிஎம் ஷோரூம்களில் பார்வைக்கு வைத்துள்ளனர். 1190 சிசி டிவின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 175.3 பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எஞ்சினாகும். இதன் டார்க் 123என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

184 கிலோ எடை கொண்ட கேடிஎம் 1190  ஆர்சி8 ஆர் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பைக்காக விளங்கும். இந்தியாவில் எப்பொழுது அறிமுகம் என்பதில் உறுதியான தகவல் இல்லை.

கேடிஎம் டியூக் 200 பற்றி படிக்க

KTM+1190+RC8+R