கொல்கத்தா , பெங்களுரூ டிராஃபிக் ஜாம் – சென்னை

நமது சென்னை நகரத்தின் சராசரி வேகம் மணிக்கு 21கிமீ , கொல்கத்தா நகரத்தின் சராசரி வேகமெ மணிக்கு வெறும் 17 கிமீ மற்றும் பெங்களூரு வேகம் மணிக்கு 18 கிமீ ஆகும்.

ola

மிகவும் மெல்லமாக நகரும் இந்திய சாலைகள் பற்றி ஓலா கேப் நிறுவனம் வெளியிட்டுள்ள டிராஃபிக் சர்வே ரிபோர்ட்டில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வே சுவாரஸ்ய தகவல்கள்

  1. மிக குறைவான வேகத்தில் நகர்வதில் கொல்கத்தா முதலிடத்தில் உள்ளது அதனை தொடர்ந்து பெங்களூரு உள்ளது.
  2. சென்னை வாசிகள் காலையிலே தங்கள் பணியை தொடங்குகின்றனர்..மிகவும் நல்ல செய்தி
  3. நாடு முழுதும் மாலை 6.30 மணிக்கு டிராஃபிக் ஜாம் அதிகமாக உள்ள நேரம் ஆகும்.
  4. அதிகாலை 3 மணி முதல் 4 மணி வரை மட்டுமே பயணிக்க சிறந்த நேரமாகும்.
  5. மாலை 3 மணிக்கு மேல் 1 கிமீ செல்ல 1 மணி நேரம் எடுத்து கொள்கிறார்களாம்.
  6. சராசரியாக இந்தியர்கள் வேலைக்கு செல்ல 11.6 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளதாம்.
  7. வேலைக்கு செல்ல இந்தியர்கள் 34.8 நிமிடங்கள் சராசரியாக தேவைப்படுகின்றது.

நல்ல வேளை சென்னை இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

இந்த டேட்டா விபரங்கள் 10 லட்சம் ஓலா ரைடர்கள் மூலம் 100க்கு மேற்பட்ட நகரங்களில் இருந்து பெறப்பட்டுள்ளது.

ஓலா இன்ஃபோகிராஃபிக்ஸ் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா பெங்களூரு    இன்ஃபோகிராஃபிக்ஸ் படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

india-most-slowest-traffic-infographicsjpg india-most-slowest-traffic-infographics-io

உங்கள் கருத்து என்ன நண்பரகளே மறக்காம கமென்ட் பன்னுங்க…. மேலும் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள்