கோவை : பெனெல்லி பைக் ஷோரூம் திறப்பு

மிக விரைவாக இந்தியளவில் பிரசத்தி பெற்ற இத்தாலியின் பெனெல்லி மோட்டார்சைக்கிள் விற்பனையகம் கோவை மாநகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடமாக இந்திய சந்தையில் டிஎஸ்கே நிறுவனத்துடன் இனைந்து பெனெல்லி மோட்டார்ஸ் செயல்பட்டு வருகின்றது.

உலகத்தர வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள டிஎஸ்கே-பெனெல்லி ஷோரூமில் சிறப்பான பயற்சி பெற்ற பணியாளர்களுடன் பல நவீன வசதிகளை கொண்டிருக்கும். சூப்பர் ஏஜென்சிஸ் வாயிலாக தன்னுடைய டீலரை தொடங்கியுள்ள பெனெல்லி நிறுவனம் தன்னுடைய 6 மோட்டார்சைக்கிள்களையும் விற்பனை செய்ய உள்ளது.

திறப்பு விழாவின் பொழுது பேசிய டிஎஸ்கே மோட்டோ வீல்ஸ் சேர்மேன் திரு சிரீஷ் குல்கார்னி கோவை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை வழங்கும் வகையில் பெனெல்லி மோட்டார் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெனெல்லி பைக் விலை பட்டியல் (கோவை எக்ஸ்ஷோரூம்)

Benelli TNT 25 – ரூ. 1.77 லட்சம்

Benelli TNT 300 – ரூ. 3.08 லட்சம்

Benelli TNT 600i –ரூ. 5.51 லட்சம்

Benelli TNT 600 GT – ரூ. 6.11 லட்சம்

Benelli TNT 899 – ரூ. 9.7 லட்சம்

Benelli TNT R – ரூ. 12.07 லட்சம்

Exit mobile version