க்ரூஸ் vs டிஸ்கவர் 100T vs ட்ரீம் யுகா- எது சிறந்தது

0
ஆட்டோமொபைல் தமிழன் தளத்தின் 11வது கேள்வி பதில் பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த கேள்வி கருத்துரையில் கேட்டவர் நண்பர் ராஜ்குமார் ஆவார். இந்த கேள்வினை பிரசன்னா உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். அவரின் கேள்விக்கான பதில்..

tamil automobile news

3 பைக்களின் சில பொதுவான அம்சங்கள் மைலேஜ் மிக சிறப்பாக இருக்கும். என்ஜினுக்கேற்ற சிறப்பான செயல்பாட்டை வெளிபடுத்தும்.

1. யமாஹா க்ரூஸ் பைக்

க்ரூஸ் பைக் நல்ல மைலேஜ் தரக்கூடிய பைக் தோற்றத்திலும் சிறப்பாகவே உள்ள பைக் ஆகும். க்ரூஸ் பைக் ஒரு மாறுபட்ட வகையில் மட்டும் உள்ளது.

Google News

106 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.5 BHP ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 7.5NM ஆகும். 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உச்சகட்ட வேகம் மணிக்கு 93கீமி ஆகும்.

மைலேஜ் நகரம் 65Kmpl

மைலேஜ் நெடுஞ்சாலை 74Kmpl

விலை மிககுறைவான சிறப்பான பைக்காகும்.

யமாஹா க்ரூஸ் விலை ; ரூ 38,268( சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)

Yamaha Crux

2. ஹோன்டா ட்ரீம் யுகா

ட்ரீம் யுகா பைக்கில் மூன்று விதமான மாறுபட்ட வகைகள் உள்ளன. அவற்றில் கிக் ஸ்டார்ட் ஆலாய், கிக் ஸ்டார்ட் ஸ்போக், மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் ஆலாய் ஆகும். டியூப்லஸ் டயர்  வசதி உள்ளது.

109 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 8.5 BHP ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 8.9NM ஆகும். 4 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உச்சகட்ட வேகம் மணிக்கு 95கீமி ஆகும்.

மைலேஜ் நகரம் 55Kmpl

மைலேஜ் நெடுஞ்சாலை 72Kmpl

விலை குறைவான சிறப்பான பைக்காகும்

ஹோன்டா ட்ரீம் யுகா கிக் ஸ்டார்ட் ஆலாய் விலை ; ரூ 47,871

ஹோன்டா ட்ரீம் யுகா கிக் ஸ்டார்ட் ஸ்போக் விலை ; ரூ 49,390

ஹோன்டா ட்ரீம் யுகா செல்ஃப் ஸ்டார்ட் ஆலாய் விலை ; ரூ 51,417

(சென்னை எக்ஸ்ஷோரூம் விலை)

honda dream yuga

3. பஜாஜ் டிஸ்கவர் 100T 

டிஸ்கவர் 100T பைக் ஆனது டிஸ்கவர் 125ST  பைக்கினை அடிப்படையாக கொண்டதாகும். சிறப்பாக கையாள முடியும்.

102 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.அதிகபட்சமாக 10.1BHP ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் டார்க் 9.2 NM ஆகும். 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ட்ரம் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உச்சகட்ட வேகம் மணிக்கு 100கீமி ஆகும்.

மைலேஜ் நகரம் 65Kmpl

மைலேஜ் நெடுஞ்சாலை 87Kmpl

விலை கூடுதலாக இருந்தாலும் சிறப்பான பைக்காகும்.

பஜாஜ் டிஸ்கவர் 100T விலை ; ரூ 50,500( தில்லி எக்ஸ்ஷோரூம் விலை)

bajaj discover 100t

ஆட்டோமொபைல் தமிழன் பார்வை…

யமாஹா க்ரூஸ் பைக் குறைந்த விலையில் சிறப்பான செயல்பாட்டை தரும். நல்ல மைலேஜ் தரக்கூடிய அட்டகாசமான பைக்காகும்.

ஹோன்டா ட்ரீம் யுகா 3 மாறுபட்ட வகையில் இருந்தாலும் தரமான கட்டமைப்பு விலைக்கேற்ற சிறப்பான செயல்பாடு. ஹோன்டா என்ஜின்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். புதிய வரவு நல்ல மைலேஜ் பைக் ஆகும்.

டிஸ்கவர் 100T பைக் 102 சிசி என்ஜினாக இருந்தாலும் நல்ல பவராக என்ஜினாக செயல்படுகிறது. விலை கூடுதல்தான் ஆனால் மைலேஜ் சிறப்பாகும்.


சற்று கூடுதலான முதலீடு செய்ய முடியும் என்றால் பஜாஜ் டிஸ்கவர் 100T முயற்சிக்கலாம். 
ஆட்டோமொபைல் தமிழன் பரிந்துரை
1. ஹோன்டா ட்ரீம் யுகா
2. யமாஹா க்ரூஸ்
3.  பஜாஜ் டிஸ்கவர் 100T