Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சாலை விபத்தும் தமிழக முதல்வர் கடையும்

by automobiletamilan
October 15, 2012
in செய்திகள்
0
SHARES
0
VIEWS
ShareRetweet

வணக்கம் தமிழ் உறவுகளே…

வாகனங்களின் வரலாறு தொடங்கிய பொழுதே விபத்துகளின் நிகழ்வுகளும் தொடங்கிவிட்டன. வாகனங்கள் மட்டுமல்ல இயற்க்கைக்கு  எதிராக எந்த பொருளாக தோன்றினாலும் அதனுடன் ஆபத்துக்களும் கூடவேதான். இருந்த பொழுதும் அதன் தேவைகள் நமக்கு என்றும் தேவைதான்.

இந்திய சாலைகளின் தரம் பரவலாக உயர்ந்து வருகிறது. ஆனால் விபத்துகளின் எண்ணிக்கை அதைவிட அதிகமாக உயர்ந்து வருகிறது. சாலைவிபத்துகளின் ஆரம்பமே கவனக்குறைவுதான்.

வாகனங்களின் எண்ணிக்கையில் உலக அளவில் மூன்றாம் இடத்தில் உள்ள நாம் ஆனால் விபத்துகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளோம்.
உலக அளவில் அதிக வாகன நேரிசலை கொண்ட நாடான அமெரிக்கா விபத்துகளின்  எண்ணிக்கையில்  மூன்றாவது இடத்தில் உள்ளது.
சீனா வாகன நேரிசலில் மற்றும் விபத்திலும் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ரஷ்யா நான்கு மற்றும் ப்ரேசில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

accidents

வாகனங்களின் விபத்துகளில் மரணம் அடைபவர்களின் சராசரி வயது 15 முதல் 30 வயதுக்குள்தான் அதிகம் எனபது மிக வருத்தமான விடயமாகும்.இவற்றில் இருசக்கர வாகனங்கள் முதன்மை பெறுகின்றன.

தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான விபத்துகளுக்கு பின்னனியாக இருப்பதில் முதலில் உள்ளது. டாஸ்மாக்தான் காரணம்.சராசரியாக தமிழக சாலைகளில் பாதிக்கப்படும் வயதினர்  15 முதல் 25 வயதிற்க்குள் அதிலும் குறிப்பாக கல்லூரி மற்றும் புதிதாக பணி செல்பவர்களே.. இவர்கள்தான் இரு சக்கர வாகனங்களை தங்கள் கனவாக கருதி இயங்குபவர்கள்.

இந்த விபத்துகளில் சிக்குபவர்கள் அனைவரும் புது வாகன ஓட்டிகளே இவர்கள் முழுமையான ஓட்டுதல் பயற்சி இல்லாத்தும் சாலைகள் பற்றி போதுமான விழிப்புணர்வு இல்லதாதும் முக்கிய காரணங்கள்.
10 வயதுக்கு சற்று அதிகமான சிறுவர்கள்கூட வாகனங்களை சரமாரியாக இயக்க ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் முட்டுசந்துகளில் மட்டும் வாகனங்களை பயனபடுத்துவதில்லை நேரிசலான நகர சாலைகளையும் பரவலாகப் பறக்கிறார்கள்.

கடந்த வாரங்களில் எமக்கு சில சோர்வான நிகழ்வுகள் அரங்கேறின. அவர்கள்  நால்வரும் என் நண்பர்களே இவர்கள் தனித்தனியான விபத்துகளில் சிக்கனாலும் பின்புலமாக இருக்கும் காரணம் டாஸ்மாக்தான்.

இந்த கடை மட்டும்தான் காரணமா என்றால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்கள் எதற்க்காக குடித்துவிட்டு பயணம் செய்கிறார்கள் என்ற கேள்வி எழும். ஆனால் உறுதியாக சொல்வேன் புதிய தலைமுறையை சீரழித்த பெருமை நிச்சியமாக தமிழகத்தின் சில முதல்வர்களை சேரும்.

கள்ளசாரயம் வழக்கம் அதிகம் இருந்த பொழுதுகூட அதிகளவில் பாதிக்கப்படாத 15 முதல் 30 வயதுக்காரர்கள் இன்று மதுவுக்கு அடிமைகள்.

                  தலைகவசம் உயிர்கவசம்

பட்டாசு

 வருகிற தீபாவளிக்கு டாஸ்மாக் வசூலை பாருங்கள்.

Tags: Cinemaஅரசியல்அனுபவம்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • contact us
  • Privacy Policy
  • SiteMap

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • Truck
  • TIPS
  • Bus

© 2023 Automobile Tamilan

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Refresh
Go to mobile version