சியட் ஜூம் எக்ஸ்எல் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்கள் அறிமுகம்

0

சியட் டயர் தயாரிப்பாளரின் புதிய அறிமுகமாக ஜூம் எக்ஸ்எல் (Zoom XL) என்ற பெயரில் மின்சார மோட்டார்சைக்கிள் டயர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஜூம் எக்ஸ்எல் இடம் பெற்ற முதல் மாடலாக டார்க் டி6எக்ஸ் பைக் விளங்குகின்றது.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புனே டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் டார்க் T6X  மின்சார மோட்டார்சைக்கிள் மாடலில் இடம்பெற்றுள்ள ஜூம் எக்ஸ்எல் டயர்கள் மிக சிறப்பான க்ரீப் தன்மையுடன், குறைவான உராய்வினை ஏற்படுத்துவதனால் டயர்களின் வாயிலாக ஏற்படும் ஆற்றல் இழப்பினை கட்டுப்படுத்தி சிறப்பான வகையில் ஆற்றலை சேமிக்கும் தன்மை கொண்டதாக மின்சார பைக் டயர்கள் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

இந்தியாவில் அடுத்த சில வருடங்களில் மிக விரைவாக வளர உள்ள எலக்ட்ரிக் பைக் சந்தையில் மிக சிறப்பான தரமுள்ள டயர்களை வழங்கும் நோக்கில் புதிய டயர் விளங்கும். மேலும் டார்க் பைக்குகளுடன் அமைந்துள்ள சியட் கூட்டணியின் வாயிலாக சிறப்பான அனுபவத்தினை வாடிக்கையாளர்கள் பெற இயலும் என சியட் விளம்பரப்படுத்துதல் துனை தலைவர் நிதிஷ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் மின்சார பைக் டார்க் டி6எக்ஸ் விற்பனைக்கு வந்தது