இது தமிழக போலீஸ் அல்ல சீனாவின் ரோபோ டிராஃபிக் போலீஸ்

0

சாலைகளில் கால்கடுக்க நின்று போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தி வரும் காவலர்களுக்கு உதவிக்கு சீனாவில் ரோபோ டிராஃபிக் போலீஸ் சிங்யாங் நகரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எந்திரன் போலீஸ்

முறையற்ற வகையில் சாலையை கடக்கும் பாதசாரிகளை பிடிப்பதற்கு இந்த எந்திர வகையிலான போலீசார்களை சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செயற்கை அறிவினை கொண்ட எந்திரன் சாலைகளை கடக்கும் பொழுது மக்கள் செய்யும் தவறுகளை கண்காணித்து அதற்கு ஏற்ப சில எச்சரிக்கை அறிவிப்புகளை வெளிப்படுத்தும்.

சிவப்பு விளக்கு உள்ள நேரத்தில் பாதையை கடந்தாலோ அல்லது தவறான வகையில் சாலையை கடக்க முயற்சித்தாலோ இதில் அனைத்து தரவுகளும் சேகரிக்கப்பட்டு அதற்கு ஏற்ற முறையில் அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் எச்சரிக்கையை வழங்கும். மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா உதவியுடன் தவறான முறையில் சாலையை கடப்பவர்களையும் பதிவு செய்யும்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சாலையில் மிக சரியாக பாதசாரிகள் கடப்பதற்கும் , போக்குவரத்து காவலர்களுக்கு உதவும் நோக்கிலே இவைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.