சீன் போடாதீங்க : லம்போர்கினி விபத்து

தைவான் நாட்டைச் சேர்ந்த டிங் என்பவர் தன்னுடைய மாடலிங் தோழியை கவரும் நோக்கில் வாடைக்கு எடுத்த லம்போர்கினி காரை விபத்துக்குள்ளாக்கியதால் $ 200,000 வரை காருக்கு செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Boyfriend-Lamborghini-crash

நியூ தாய்பெய் நகரத்தில் இந்த மஞ்சள் நிற லம்போர்கினி கார் விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த காரை டிங் ஓட்டி வரும்பொழுது மிக அதிகப்படியான மது அருந்தியிருந்ததே விபத்து காரணம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய 18 வயது மாடலிங் காதலியை கவரும் நோக்கில் தினமும் $1500 கட்டணத்தில் இந்த வாடகை லம்போர்கினி காரை பயன்படுத்த தொடங்கியுள்ளார் . தன்னுடைய காதலியிடம் தான் சீனாவில் சர்வதேச அளவில் வியாபரம் செய்யும் மிகப்பெரிய பணக்காரன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் விசாரனையின் முடிவில் டிங் உள்ளூர் டீ கடையில் வேலை செய்பவர் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. விபத்து செய்தி மாடலிங் பெண்ணுடன் இணைத்து பரப்புரை செய்ய தொடங்கியதும் . தன்னுடைய அனைத்து புகைப்படங்களையும் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டாராம்…மாடலிங் தோழி

Boyfriend blames girlfriend for Lamborghini crash
Boyfriend blames girlfriend for Lamborghini crash

தினம் $1500 கட்டணத்தில் வாடைக்கு கட்டனத்தில் எடுத்த காருக்கு இழப்பீடாக $ 200,000 வரை செலவாகலாம்…

இது கொஞ்சம் மாற்றி போட்டால் நம்ம ஊருக்கும் ஒத்து வந்து விடும்… அதெப்படிங்க.. கார் இருக்கிற இடத்தில பைக் போடுங்க..நம்ம ஆளுங்க காட்டுற சீன விடவா ? உங்களுக்கு ஏதாவது சொல்ல தோனுதா..கமென்ட் பன்னுங்க..

சீனாவுல நியூஸ் பாருங்க…நமக்கு புரியாத பாஷை தான்

தகவல்