Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சுசுகி ஸ்விஷ் மற்றும் சிலிங்ஷாட் நீக்கம்

by automobiletamilan
April 14, 2017
in செய்திகள்

இந்திய சந்தையிலிருந்து சுசுகி சிலிங்ஷாட் மற்றும் சுசுகி ஸ்விஷ் ஸ்கூட்டர் நீக்கப்பட்டுள்ளது. விற்பனையில் தொடர்ந்து சரிவினை பெற்றதால் இரு மாடல்களும் நீக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஷ்

  • 2010 ஆம் ஆண்டு சுசுகி சிலிங்ஷாட் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
  • 2012 ஆம் ஆண்டு சுசுகி ஸ்விஷ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கடந்த சில மாதங்களாகவே விற்பனை அறிக்கையில் குறிப்பிடபடாமல் உள்ளது.

125 சிசி சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விஷ் ஸ்கூட்டர் கடந்த சில மாதங்களாகவே மாதாந்திர விற்பனை அறிக்கையில் பூஜ்யம் என்றே கணக்கில் காட்டப்பட்டு வருகின்றது. மேலும் மற்றொரு மாடலான 125cc சுசுகி சிலிங்ஷாட் பைக்கும் பூஜ்யம் என்ற அறிக்கையில் குறிப்படப்பட்டு வந்த நிலையில் அதிகார்வப்பூர்வ இந்திய சுசுகி மோட்டார்சைக்கிள் இணையதளத்தில் இருந்து ஸ்விஷ் , சிலிங்ஷாட் மற்றும் பழைய ஆக்செஸ் 125 ஸ்கூட்டரும் நீக்கப்பட்டுள்ளது.

8.50 BHP பவர் மற்றும் 10 Nm டார்க் வெளிப்படுத்தும் 125சிசி எஞ்சினை  சிலிங்ஷாட் பைக் பெற்றிருந்தது. ஸ்விஷ் ஸ்கூட்டரில் 125cc எஞ்சின் பொருத்தப்பட்டு 8.50 BHP பவர் மற்றும் 9.80 Nm டார்க் வெளிப்படுத்தி வந்தது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.

சுசுகி நிறுவனத்தின் ஹயாத் பிஎஸ் 4 மாடல் சமீபத்தில் விற்பனைக்கு வெளியிட்டது.  இந்திய சந்தையில் சுசூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 150சிசி சந்தையில் ஜிக்ஸர் பைக் வாயிலாக நல்ல சந்தை மதிப்பை பெற்று விளங்குகின்றது.

 

Tags: ஸ்விஷ்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version