சும்மா கலக்கும் சுசூகி ஸ்விஃப்ட் , இக்னிஸ் ரேஸர் மாடல்கள்

புதிய சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்ட்டிவ் மாடல் இந்தியாவிலும் வரவுள்ள நிலையில் சுசூகி இக்னிஸ் மற்றும் ஸ்விஃப்ட் கார்களை நவீன முறையில் ரென்டரிங் செய்யப்பட்ட படங்கள் கலக்கலாக வந்துள்ளது.

நீலம்  கலந்த வண்ணத்துடன் ரேஸ் கொடியின் பாடி கிராஃபிக்ஸ் பெற்று உண்மையான ரேஸ் காரினை போல காட்சியளிக்கும் ஸ்போர்ட்டிவ் ஆர்எஸ் ஸ்விஃப்ட் மாடல் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி இக்னிஸ் காரில் மோட்டோக்ராசர் ஸ்டைல் என்ற பெயரில் அசத்தலாக உள்ளது.இது தவிர ஜப்பானியசந்தையில் உள்ள ஸ்பேசியா கஸ்டம் வேன் மாடலும் நேர்த்தியாக உள்ளது.

புதிய மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக டிசையர் மார்ச் மாதம் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாருதி இக்னிஸ் கார் வருகின்ற 13ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் படிக்க – மாருதி இக்னிஸ் காரின் முழுவிபரம்

Recommended For You