மாருதி சுசூகி நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் முதல் மாடலான மாருதி சூப்பர் கேரி விற்பனைக்கு அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ள நிலையில் மாருதி சூப்பர்கேரி விலை ரூ. 4.01 லட்சத்தில் வெளியிடப்பட உள்ளது.

Maruti-Suzuki-Super-Carry

முதற்கட்டமாக கோல்கத்தா , அகமதாபாத் மற்றும் லூதினா ஆகிய மூன்று நகரங்களிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ள மாருதி சுசூகி சூப்பர் கேரி தென்ஆப்பரிக்காவில் சில மாதங்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது அதனை தொடர்ந்து இந்தியாவில் வெளியிடப்படுகின்றது.

செலிரியோ காரில் பொருத்தப்பட்டுள்ள அதே 793சிசி டீசல் இஞ்ஜின் 24 hp ஆற்றலை வெளிப்படுத்தும் மற்றும் டார்க் 75 ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. சூப்பர்கேரி மினி டிரக் மைலேஜ் 1 லிட்டருக்கு 22.07 கிலோமீட்டர் ஆகும்.

740 கிலோ பேலோடினை கொண்டுள்ள மினிடிரக் 3.8 மீட்டர் நீளம் கொண்டதாகும். இதன் பொருள் ஏற்றும் கார்கோ பாக்ஸ் அளவு 2.18 X 1.49 மீட்டர் ஆகும்.  175 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

Maruti-Suzuki-Super-Carry-Interior

 

முன்பக்க டயர்களுக்கு டிஸ்க் பிரேக் , லோட் சென்சிங் புரோபார்னைங் வால்வு பிரேக்கிங் அமைப்பு , அகலமான விண்ட்ஸ்கிரின்  , ஆர்விஎம் இருபக்கங்களிலும் , ஹெட்லேம்ப் லெவலர் மற்றும் சிறப்பான கையாளுதலை வெளிப்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2 வருடம் அல்லது 72,000 கிமீ வரை வாரண்டி கிடைக்கும்.

டாடா ஏஸ் , மஹிந்திரா ஜீட்டோ போன்ற மாடல்களுக்கு போட்டியாக  அமைந்துள்ளது. பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள மாருதி வர்த்தக வாகன பிரிவின் டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. முன்பதிவு மற்றும் தொடர்புக்கு இலவச டோல் எண் 800 200 6392 or 1800 102 1800 (toll free) .

மாருதி சூப்பர்கேரி விலை விபரம்

கோல்கத்தா – ரூ.4.11 லட்சம்

அகமதாபாத் – ரூ. 4.03 லட்சம்

லூதினா – ரூ.4.01 லட்சம்

(எக்ஸ்ஷோரூம் விலை)

மற்ற நகரங்களுக்கு அடுத்த சில மாதங்களுக்குள் விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த வருடத்தின் இறுதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது..

சூப்பர் கேரி மினி டிரக் படங்கள்