சென்னை மழை : 5 லட்சம் விலையில் சொகுசு கார்கள் ஏலம்

0

டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சொகுசு கார்கள் ரூ.5 லட்சம் விலையில் ஏலம் போகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொகுசு கார்கள் முதல் சாதரன கார்களின் விலை பல மடங்கு குறைவான விலையில் ஏலத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது.

Chennai-floods-aid

போர்ஷே கார் ரூ.5 லட்சம் , பிஎம்டபிள்யூ ரூ.8 லட்சம் என ஏலம் போகின்றதாம் 1 கோடி விலையுள்ள இந்த கார்களுக்கே இந்த நிலை என்றால் ரூ. 3 லட்சம் கார்களின் விலையே சொல்ல தேவையில்லை. ஆனால் இந்த கார்கள் அனைத்தும் மழை வெள்ளத்தால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி நிலையில் உள்ள கார்களாகும். மேலும் இவை காப்பீடு நிறுவனங்களால் நஷ்ட் ஈடு வழங்கப்பட்ட கார்களாகும். ஆன்லைன் ஏல நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் இந்த கார்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல வட மாநிலத்தவரும் பங்கேற்று இந்த கார்களை ஏலத்தில் எடுத்து வருகின்றனராம்.

coport.in என்ற ஏல நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தங்கள் ஸ்டாக் யார்டில் 100க்கு மேற்பட்ட கார்களை வைத்துள்ளதாம். இது மட்டுமல்லாமல் இன்னும் பல கார்கள் வந்து கொண்டு உள்ளதாம். இந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ராஜிவ் கபூர் கூறுகையில்

 

கடந்த புதன் கிழமை ஏலத்தின் பொழுது 2012 போர்ஷே கேமென் எஸ்யூவி ரூ. 5 லட்சத்திறக்கும் , பிஎம்டபிள்யூ 3 சீரீஸ் 6 லட்சம் மற்றும் 2015 ஆடி ஏ4 கார் 3.4 லட்சத்திற்க்கு மட்டுமே ஏலம் எடுக்கப்பட்டதாம். இந்த கார்கள் அனைத்தும் உடைக்கப்பட்டு உதிரிபாகங்களுக்கு பெருமளவு பயன்படுத்த வாய்ப்புள்ளது. கடந்த வாரம் தினமும் 10 கார்கள் வரை வந்து குவிகின்றதாம்.

செலக்ட் ஆட்டோ மார்ட் ஆன்லைன் ஏல நிறுவனம் தெரிவிக்கையில் இது வரை 10,000 கார்களுக்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் அடுத்த 20 நாட்களில் 5000 கார்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது.

தொடர்புடையவை  :

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார்களை வாங்காதீங்க