ஜாகுவார் நிறுவனம் இந்தியாவில் ஜாகுவார் எஃப்-டைப் காரினை வருகிற ஜூலை மாதம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. ஜாகுவார் எஃப்-டைப் கார் இரண்டு விதமான மாறுபட்டவையில் விற்பனைக்கு வரும். இந்தியாவில் ஜாகுவார் எஃப்-டைப் காரின் விலை ரூ 1.2 கோடி முதல் ரூ 1.4 கோடிக்குள் இருக்கலாம்.

2013 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த வடிவமைப்புக்கான விருதினை ஜாகுவார் எஃப்-டைப் கார் வென்றுள்ளதை முன்பே பதிவிட்டிருந்தேன். முழுமையான கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படுவதனால் 100 சதவீத வரியினால் விலை அதிகமாகத்தான் இருக்கும்.

Jaguar F-Type

இரண்டு விதமான வேரியண்டில் வெளிவரும் . அவை வி6 எஸ் மற்றும் வி8 எஸ் ஆகும்.

ஜாகுவார் எஃப்-டைப் வி6 எஸ்

வி6 எஸ் மாறுபட்டவையில் 3.0 லிட்டர் சூப்பர்சாரஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச ஆற்றல் 380பிஎஸ் ஆகும்.   8 ஸ்பீடு தானியிங்கி கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வேகம் எலெக்ட்ரானிக் முறை மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 275கிமீ ஆகும். 0-100 கிமீ வேகத்தை 4.9 விநாடிகளில் எட்டிவிடும்.

ஜாகுவார் எஃப்-டைப் வி8 எஸ்

வி8 எஸ் மாறுபட்டவையில் 5.0 லிட்டர் சூப்பர்சாரஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் அதிகபட்ச ஆற்றல் 495பிஎஸ் ஆகும்.  8 ஸ்பீடு தானியிங்கி கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 300கிமீ ஆகும். 0-100 கிமீ வேகத்தை 4.3 விநாடிகளில் எட்டிவிடும்.

ஜாகுவார் எஃப்-டைப் காரில் பயன்படுத்தப்படும் என்ஜின்கள் வேறு கார்களில் பயன்படுத்தப்படுவதில்லை என்பது சிறப்பாகும்.
உலகின் சிறந்த டிசைன் கார் விருது பெற்ற ஜாகுவார் எஃப்-டைப் கார் ஜூலை மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஜாகுவார் எஃப்-டைப் காரின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 1.2 கோடி முதல் 1.4 கோடி வரை இருக்கலாம்.
உலகின் டிசைன் கார் விருது பற்றி படிக்க கீழே சொடுக்கவும்.