Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

ஜாகுவார் எஃப் பேஸ் இந்தியாவில் விரைவில் அறிமுகம்

by automobiletamilan
ஜூலை 12, 2016
in செய்திகள்

ஜாகுவார் நிறுவனத்தின் ஜாகுவார் எஃப் பேஸ் சொகுசு எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்தியாவில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 அரங்கில் பார்வைக்கு அறிமுகம் செய்யப்படது.

Jaguar-FPace-min

 

ஜாகுவார் வரலாற்றிலே முதன்முறையாக எஸ்யுவி ரக கட்டமைப்பில் வடிவமைக்கப்பட முதல் காராக விளங்கும் எஃப் பேஸ் மிக சிறப்பான பல நவீன வசதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 6 விதமான வேரியண்ட்களில் மூன்று விதமான இக்னியம் ரக இஞ்ஜின்கள் பெற்று விளங்குகின்றது.

ஜாகுவார் சிஎக்ஸ்-17 கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எஃப்பேஸ் காரின் பெரும்பாலான பாகங்கள் அதாவது 81 % கட்டமைப்பினை அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜாகுவார் எஃப் பேஸ் இஞ்ஜின்

177எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இது FWD / AWD என இரண்டிலும் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.

237எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் RWD ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.

296எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 700என்எம் ஆகும். இதில் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் (AWD) ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.

375 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில்ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் (AWD) ஆட்டோமேட்டிக் கியர்பாக்சில் கிடைக்கும்.

தற்பொழுது இந்தியாவில் அரசின் அனுமதிக்கான சோதனை பணிகளுக்காக இறக்குமதி செய்யப்பட்டள்ள இஞ்ஜின் 2.0லிட்டர் மாடலாகும்.

பிஎம்டபிள்யூ எக்ஸ்3 , போர்ஷே மசான் ,மெர்சிடிஸ் ஜிஎல்சி , ஆடி க்யூ5 போன்ற நடுத்தர எஸ்யூவி ரக கார்களுடன் சந்தையை பகிர்ந்து கொள்ளும்.

ஜாகுவார் F பேஸ் கார் படங்கள்

Tags: Jaguar
Previous Post

3 லட்சம் பேர் உயிரை பலி வாங்கியதா மாருதி 800 கார் – அதிர்ச்சி ரிபோர்ட்

Next Post

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்110 ஜூலை 14 முதல்

Next Post

ஹீரோ ஸ்பிளென்டர் ஐஸ்மார்ட்110 ஜூலை 14 முதல்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version