ஜாகுவார் XE டீசல் காருக்கு முன்பதிவு தொடங்கியது

கடந்த 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில்காட்சிப்படுத்தப்பட்ட ஜாகுவார் XE டீசல் காருக்கு முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த சில வாரங்களுக்கு விற்பனைக்கு வெளியிடப்படுள்ளது. தற்பொழுது ஜாகுவார் எக்ஸ்இ பெட்ரோல் மாடல் மட்டுமே விற்பனையில் உள்ளது.

ஜாகுவார் XE டீசல்

2015 ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வெளியடப்பட்ட ஜாகுவார் எக்ஸ்இ மாடல் முதன்முறையாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து முதலாவதாக பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட சொகுசு செடான் காரை ஜாகுவார் வெளியிட்டிருந்தது.

தற்பொழுது டீசல் செடான் காரை அறிமுகம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதை தொடர்ந்து முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ள நிலையில் ஜாகுவார் எக்ஸ்இ  டீசல் காரில் இடம்பெற்றுள்ள 2.0 லிட்டர் இன்ஞ்ஜினியம் எஞ்சினில் இருவிதமான பவர் வகையில் கிடைக்கின்றது. அவை 160 bhp பவருடன் 380 Nm டார்க் வெளிப்படுத்தும் மாடலாகவும் 178 bhp பவருடன் 430 Nm டார்க் வழங்கும் வகையிலும் கிடைக்கின்றது. இரண்டிலும் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் பென்ஸ் C கிளாஸ், ஆடி A4 மற்றும் BMW 3 Series போன்ற மாடல்களுக்கு சவாலாக ஜாகுவார் எக்ஸ்இ கார் விளங்குகின்றது.

Exit mobile version