நிசான் ஜிடி-ஆர் வரைந்த இந்திய வரைபடம் – குடியரசு தினம்

நமது நாட்டின் 68வது குடியரசு தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் காட்ஸில்லா என்கின்ற நிசான் ஜிடி-ஆர் ஸ்போர்ட்டிவ் கார் வாயிலாக உலகின் மிகப்பெரிய இந்திய வரைபடம் வரைந்துள்ளது.

ஜிடி-ஆர் கார்

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சாம்பார் ஏரியில் இந்ந சாதனை முயற்சியை சிகப்பு வண்ண நிசான் ஜிடி ஆர் கார் நிகழ்த்தியுள்ளது. இந்த சாதனை 2018 ஆம் ஆண்டு லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யப்பட உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய வரைபடமாக வரையப்பட்டுள்ள இந்திய நாட்டின் வரைபடத்தின் நீளம் மூன்று கிலோ மீட்டர் , 2.8 கிலோ மீட்டர் அகலம் என மொத்தமாக 14.7 கிலோ மீட்டர் சுற்றளவை கொண்ட வரைபடமாகும். இதனை நிசான் ஜிடி-ஆர் காரினை கொண்டு சாம்பார் ஏரியின் நிலப்பகுதியில் ரேலி ஒட்டுநர் ராகுல் கந்தராஜ் செய்தார். இது குறித்தான சாதனையை லிம்கா புத்தகத்தில் பதிவு செய்யும் நோக்கில் ட்ரோன்களை கொண்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற ஜூன் 2018 லிம்கா சாதனை புத்தகத்தில் இந்த சாதனையை பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. இது குறித்து நிசான் வெளியிட்டு யூடியூப் வீடியோ இதோ..

link-https://youtu.be/2AqKcVgZUIA

 

Recommended For You