டாடா ஏஸ் டிரக் 10 வருட கொண்டாட்டம்

கடந்த 2005ம் ஆண்டில் விற்பனைக்கு வந்த சின்ன யானை டாடா ஏஸ் சிறிய ரக டிரக் 10 வருடங்களில் 15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. 85 சதவீத சந்தை மதிப்பினை கொண்டுள்ளது.

சின்ன யானை என்ற புனைபெயருடன் விற்பனைக்கு வந்த டாடா ஏஸ் கடந்த 10 வருடங்களில் பல புதிய மாடல்களை இணைத்துக்கொண்டு 15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. விற்பனையாகும் ஐந்து சிறிய ரக டிரக்கில் 1 டாடா ஏஸ் டிரக்காக உள்ளது.

டாடா ஏஸ் டிரக்கில் உள்ள வேரியண்ட்கள் ஏஸ்HT, ஏஸ் EX, ஏஸ்CNG, ஏஸ் High deck, ஏஸ் DICOR NA, ஏஸ் DICOR turbo, ஏஸ் Zip மற்றும் சூப்பர் ஏஸ் மின்ட்  போன்றவை சரக்கு வாகனங்களாகவும் மற்றும் பயணிகளுக்காக மேஜிக் HT, மேஜிக் CNG, மேஜிக் IRIS மற்றும் மேஜிக் IRIS CNG என மொத்தம் 12 மாடல்களில் உள்ளது.

1600க்கு மேற்பட்ட சேவை மையங்களுடன் செயல்படும் டாடா மோட்டார்ஸ் ஏஸ் டிரக்கினை இந்தியா மட்டுமல்லாமல் தென்கிழக்கு ஆசிய நாடுகள் , தெற்கு ஆசியா நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா என மொத்தம் 28 நாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

மேலும் வாசிக்க ; டாடா ஏஸ் vs தோஸ்த் vs மேக்சிமோ- ஒப்பீடு

மேலும் டாடா ஏஸ் டிரக்கின் மேம்படுத்தப்பட்ட வேரியண்ட்கள் மூன்று அம்சங்களில் உருவாக்க உள்ளனர். அவை டிசைன்நெக்ஸ்ட் , பெர்ஃபாமென்ஸ்நெக்ஸ்ட் மற்றும் ஃப்யூல்நெக்ஸ்ட் .

Tata Ace mini truck celebrates its 10th anniversary

Exit mobile version