Site icon Automobile Tamilan

டாடா டியாகோ ஆக்டிவ் க்ராஸ்ஓவர் படங்கள் வெளியானது

டாடா மோட்டார்சின் புதிய டியாகோ ஹேட்ச்பேக் காரை அடிப்படையாக கொண்ட டியாகோ ஆக்டிவ் க்ராஸ்ஓவர் மாடல் ஆட்டோ எக்ஸ்போ மற்றும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வந்தது. அடுத்த சில வாரங்களில் டியாகோ ஏக்டிவ் க்ராஸ் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது.

இஞ்ஜின் ஆற்றல் மற்றும் செயல்திறன் போன்றவற்றி மாறுதல் இல்லாமல் டியாகோ காரின் 69bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8bhp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

தோற்ற அமைப்பில் சில கூடுதலான துனைகருவிகளை பெற்ற  க்ராஸ் மாடலாக விளங்க ரூஃப் ரெயில் , பாடி கிளாடிங் , கிராஃபிக்ஸ் ஸ்டைல் , அலாய் வீல் மாற்றம் போன்றவற்றுடன் உட்புறத்தில் சில மாறுதல்களை பெற்றிருக்கலாம். சாதரன டியாகோ காரை விட ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் கூடுதலான விலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வேரியண்ட்கள் இடம் பெறலாம். டியாகோ ஆக்டிவ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில வாரங்களில் சந்தைக்கு வரலாம்.

படங்கள் டிவிட்டர் சிரிஷ் சந்திரன்

Exit mobile version