டாடா டியோகா கார் உற்பத்தி தொடங்கியது

டாடா ஸீகா என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு பின்பு டாடா டியாகோ என்ற பெயரினை பெற்றுள்ளது. டாடா சனந்த் ஆலையில் நானோ காருக்கு பிறகு உற்பத்தி செய்யப்படும் முதல் காராகும்.

டாடா டியாகோ

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள சனந்த் பகுதியில் உள்ள டாடா மோட்டார்ஸ் நானோ தொழிற்சாலையில் நானோ காருக்கு அடுத்தபகடியாக டியாகோ கார் தயாரிக்கப்பட தொடங்கியுள்ளது. நானோ கார் தயாரிக்கவே உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆலையாகும். நானோ எதிர்பார்த்த விற்பனையை எட்டாத காரணத்தால் டியாகோ காரினை இந்த ஆலையில் உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளது.

டாடா டியோகோ காரில் 69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.4 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையிலான விலையில் வரவுள்ள டியோகா கார் கடுமையான போட்டிகள் நிறைந்த செலிரியோ , கிராண்ட் ஐ 10 , வேகன் ஆர் ,  பீட் மற்றும் சிறியரக எஸ்யூவி கேயூவி100 போன்ற மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.

Share