டாடா நெக்ஸான் எஸ்யூவி கார்

டாடா கார் நிறுவனம் எவோக் எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டு நெக்ஸான் எஸ்யூவி கான்செப்டில் புதிய எஸ்யூவி காரை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாடா நெக்ஸான் எஸ்யூவி

டாடா குழுமத்தின் லேண்ட் ரோவர் எவோக் எஸ்யூவி காரின் அடிப்படையாக கொண்டு சிறிய எஸ்யூவி காரை உருவாக்க உள்ளது.  2014ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்ட நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி கார் 2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.

மிக நேர்த்தியான தோற்றம், சிறப்பான கட்டமைப்பு, புதுவிதமான வடிவமொழி மற்றும் பல சிறப்பம்சங்களை தாங்கிய காராக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எக்ஸ்104 என்ற குறியீடு பெயரில் உருவாகி வரும் காம்பெக்ட் எஸ்யூவி ஆனது எக்ஸ1 தளத்தில் அதாவது போல்ட் மற்றும் ஜெஸ்ட் தளத்தில் நெக்ஸான் உருவாக உள்ளது.

பெட்ரோல் மாடலில் டாடாவின் ரெவோட்ரான் 1.2 என்ஜினும் டீசல் மாடலில் 1.5 லிட்டர் என்ஜினும் பொருத்த வாய்ப்புகள் உள்ளது.

ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காருக்கு மிகுந்த போட்டியை தரக்கூடிய வகையில் டாடா நெக்ஸான் விளங்கும்.

Exit mobile version