Site icon Automobile Tamilan

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் படங்கள்

வரவிருக்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவி காரின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை மாதம் புதிய நெக்ஸான் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கான்செப்ட் மாடலுக்கு இணையாகவே உற்பத்தி நிலையை எட்டியுள்ள நெக்ஸான் கார் காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இம்பேக்ட் டிசைன் மொழி வடிவத்தில் உருவாக்கப்பட்ட டியாகோ , வரவுள்ள  கைட்5  மற்றும் நெக்ஸான் போன்ற கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட மாடலான நெக்ஸான் காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் கூடுதலாக ஏஎம்டி ஆப்ஷனும் இடம் பெற்றிருக்கும்.

புராஜெக்டர முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , 16 இஞ்ச் அலாய் வீல் , 6.5 இஞ்ச் தொடுதிரை அமைப்பு போன்றவற்றை பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் கார் – 17 படங்கள்

[envira-gallery id="7091"]

படங்கள் உதவி ; autocarindia

 

Exit mobile version