டாடா மோட்டார்சின் டாமோ பிராண்டில் எதிர்கால தொழில்நுட்பங்களை கொண்ட கார்களை உருவாக்கும் நோக்கில் டாடா மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாமோ

பிரசத்தி பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கார்களுக்கு இடையிலான தொடர்பினை ஏற்படுத்தும் வகையிலான நுட்பத்தினை பெற்றுள்ள மைக்ரோசாஃப்ட் கனெக்டேட் வெய்கிள் பிளாட்பாரத்தில் உள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் டாடா மோட்டார்ஸ் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. டாடா மோட்டார்சின் புதிய மொபிலிட்டி பிராண்டாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாமோ பிராண்டு காரின் வாயிலாக மைக்ரோசாஃப்ட் நுட்பங்கள் இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற மார்ச் 7 ,2017 ல் நடைபெற உள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் முதல் டாமோ பிராண்ட் கார் மாடல் சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மாடலின் வாயிலாக ஆட்டோமொபைல் சார்ந்த செயல்பாடுகளை கொண்ட மைக்ரோசாஃப்ட் ஆப்ஸ்கள் பயன்படுத்தப்படிருக்கும்.

[irp posts=”16243″ name=”டாமோ ஃப்யூச்சரோ டீஸர் – 2017 ஜெனிவா மோட்டார் ஷோ”]

வின்டோஸ் அசூர் கிளவூட் வாயிலாக  பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. அவை உயர்தர நேவிகேஷன் , வாகனம் சார்ந்த இடமறிதல் , வாடிக்கையாளர்களுக்கு சர்வீஸ் மற்றும் அதன்சார்ந்த அம்சங்களை நினைவுப்படுத்துதல் உள்பட மேலும் பல வசதிகள் கிடைக்கும்.  டாடா மோட்டார்சின் பயணிகள் வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் வர்த்தக வாகன பிரிவுக்கும் வாகன தொடர்பு சார்ந்த சேவைகளை எதிர்காலத்தில் வழங்க வாய்ப்புள்ளது.