டாடா ஸெனான் யோதா விற்பனைக்கு வந்தது

0

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஸெனான் யோதா பிக்கப் டிரக் மாடலை ரூ. 6.05 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. டாடா ஸெனான் யோதா சிங்கிள் மற்றும் டபுள் கேப் தேர்வுகளில் கிடைக்கும்.

 

Google News

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகன பிரிவு விளம்பர தூதுவராக நடிகர் அக்ஷய்குமாரை சமீபத்தில் நியமித்துள்ளது. இந்த ஆண்டின் முதல்மாடலாக டாடா வெளியிட்டுள்ள யோதா மாடலில் பிஎஸ்-3 மற்றும் பிஎஸ்-4 என்ஜின்தேர்வுகளில் கிடைக்கின்றது. பிஎஸ் 3 என்ஜினில் சிங்கிள் கேப் மற்றும் பிஎஸ் 4 யில் டபுள் கேப் பெற்றுள்ளது.

ஸெனான் யோதா என்ஜின்

டாடாவின் யோதா மாடலில் இடம்பெற்றுள்ள 3.0 லிட்டர் டீசல் என்ஜின் பிஎஸ்3 சுற்றுசூழல் விதிகளின் அடிப்படையில் 72 ஹெச்பி பவர் , 223 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.  பிஎஸ்4 சுற்றுசூழல் விதிகளின் அடிப்படையில் 85 ஹெச்பி பவர் , 250 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.

1250 கிலோ தள்ளுசுமை கொண்ட ஸெனான் யோதா பிக்கப் மாடலின் முன்பக்கத்தில் 5 இலை ஸ்பிரிங் மற்றும் பின்பக்கத்தில் 9 இலை ஸ்பிரிங் பெற்று 4X4 மற்றும் 4X2 ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.

டாடா ஸெனான் யோதா பிக்கப் ஆரம்ப விலை ரூ.6.05 லட்சம்.

படங்கள்