விவசாயிகளுக்கு டிராக்டர் சேவையை வழங்கும் டிரிங்கோ

0

மஹிந்திரா அன்டு மஹிந்திரா குழுமத்தின் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனமான டிரிங்கோ மூலம் விவசாய பணிகளுக்கான டிராக்டர் மற்றும் விவசாய உபகரணங்கள் வாடகைக்கு கிடைக்க உள்ளது. டிரிங்கோ (TRRINGO) முதற்கட்டமாக 101 சேவை மையங்களை கர்நாடகா மாநிலத்தில் அமைத்துள்ளது.

mahindra-trringo-tractor-sharing

Google News

கார்களுக்கான உபேர் மற்றும் ஓலா போன்ற நிறுவனங்கள் வழங்கும் சேவை போன்ற அமைப்பினை கொண்ட ட்ரிங்கோ சேவையின் வாயிலாக விவசாயிகளுக்கு பயன்தரும் வகையிலான டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் என அனைத்து விதமான சேவைகளும் உடனடியாக வழங்கும் வகையில் மஹிந்திரா டிரிங்கோ செயல்படும்.

முதற்கட்டமாக கர்நாடாக மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ள சேவையில் 101 மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. இவற்றின் வாயிலாக டிராக்டர் சேவைய அழைத்த ஒருமணி நேரத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் ரூ.50 லட்சம் மதிப்பிலான முதலீட்டை ட்ரிங்கோ செய்துள்ளது.

இந்த சேவை மையங்களில் 5 டிராக்டர் மற்றும் 10 விதமான விவசாய உபகரணங்கள் கையிருப்பில் வைத்திருக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு தேவையை உடனடியாக பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும். இவ்வாறுஅமைக்கப்படுகின்ற மையங்களில் அருகாமையில் உள்ள டிராக்டர்கள் வைத்திருப்பவர்களே இந்த சேவையில் இணைந்து செயல்படுவார்கள் அதாவது 10 சதவீத கமிஷன் அடிப்படையில் செயல்படுகின்றது.

mahindra-yuvo-tractor

தற்பொழுது 101 மையங்கள் கர்நாடகா மாநிலத்தில் செயல்பட தொடங்கியுள்ள நிலையில் அடுத்த மாதம் நாடு முழுவதும் சேவையை அதிகரிக்கும் நோக்கில் 165 மையங்களை திறக்க உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் மிகசிறப்பான பங்களிப்பினை இந்திய டிராக்டர் சந்தையில் வழங்கி வருகின்றது.