டிரையம்ஃப் ராக்கெட் X க்ரூஸர் பைக் சிறப்பு பதிப்பு

இந்தியாவில் டிரையம்ஃப் ராக்கெட் X க்ரூஸர் பைக்கின் சிறப்பு பதிப்பினை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருவது உறுதியாகியுள்ளது.  500 ராக்கெட் X பைக்குகள் மட்டுமே உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளது.

டிரையம்ஃப் ராக்கெட் X பைக்

2013ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையை தொடங்கிய டிரையம்ஃப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துவருகின்றது.

ராக்கெட் III ரோட்ஸ்டார் மோட்டார்சைக்கிளின் பத்து வருட கொண்டாடத்தை ஓட்டி இந்த சிறப்பு வரையறுகப்பட்ட பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவிற்க்கு 8 பைக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

டிரையம்ஃப் ராக்கெட் X க்ரூஸர் பைக்

உலகில் உற்பத்தி செய்யப்படும் மோட்டார்சைக்கிள் என்ஜினிலே மிக பெரிய என்ஜின் என பெருமைக்குரிய என்ஜினை பெற்று விளங்கும். ராக்கெட் எக்ஸ் பைக்கில் 146பிஎச்பி ஆற்றலை தரவல்ல 2.3 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

ராக்கெட் எக்ஸ் பைக் முழுதும் கருப்பு வண்ணத்தை கொண்டுள்ளது. மேலும் சில்வர் பட்டைகள் மற்றும் குரோம் பட்டைகளை சில இடத்தில் கொண்டுள்ளது.  மேலும் 500 பைக்குகளிலும் எத்தனாவது வண்டி என அறிந்துகொள்ளவதற்க்காக 1 முதல் 500 வரை எண்கள் பதிக்கப்பட்டிருக்கும்.

டிரையம்ஃப் ராக்கெட் X க்ரூஸர் பைக்

தற்பொழுது விற்பனையில் ராக்கெட் III ரோட்ஸ்டார் பைக்கை விட கூடுதலாக ரூ.1 லட்சம் இருக்கும்.

ராக்கெட் III ரோட்ஸ்டார் விலை ரூ.21,29,560 ஆகும். (Ex-showroom delhi)

Triumph motorcycle will be launch Rocket X limited edition cruiser bike in  India