மீண்டும் டிவிஎஸ் அகுலா 310 ஸ்பை படங்கள் வெளியானது

0

டிவிஎஸ் அகுலா 310 என அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி 300 ஆர்டிஆர் பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் மீண்டும் வெளியாகியுள்ளது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அப்பாச்சி 300 வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Google News

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட அகுலா 310 கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்ட அப்பாச்சி 300 பைக்கில் பெரும்பாலான பாகங்கள் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக்கில் இருந்து பெறப்பட்டிருக்கும்.  கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டு வரும் அகுலா 310 பைக்கின் படங்கள் வெளிவந்துள்ளது.

வெளியாகியுள்ள படங்களின் வாயிலாக அகுலா 310 பைக் விரைவில் உற்பத்திக்கு எடுத்து செல்லும் வகையில் அமைந்துள்ளது. கான்செப்ட் மாடலை போன்றே மிகுந்த ஸ்டைலிங் அம்சங்களுடன் முழுதும் அலங்கரிக்கப்பட்ட மாடலான பைக்கில் 34 குதிரை சக்தி ஆற்றலை வெளிப்படுத்தும் 313 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 28 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்பக்கத்தில் அப்சைடு ஃபோர்க்குகள் , பின்பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பர் , முன் மற்றும் பின் பக்க டயரிகளில் டிஸ்க் பிரேக் மற்றும் ஏபிஎஸ் சிஸ்டத்தை பெற்றதாக விளங்கும். அலாய் வீல் தோற்றம் , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவை ஜி310 ஆர் பைக்கில் இருந்து பெறப்பட்டிருக்கும்.

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் டிவிஎஸ் அப்பாச்சி 300 பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

image source: maxabout.com