டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக் வேகம் எவ்வளவு ?

0

புதிய டிவிஎஸ் அப்பாச்சி RTR 200  பைக் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 யில் பார்வைக்கு வரலாம் அதனை தொடர்ந்து டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.

TVS-Draken-concept

Google News

அப்பாச்சி RTR 200 பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள 200சிசி என்ஜினுக்கு பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் உதவியுடன் கூலிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.  தற்பொழுது இந்தியா மட்டுமல்லாமல் இந்தோனேசியாவிலும் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக் முக்கிய அம்சங்கள்

 • டிவிஎஸ் டார்கன் கான்செப்ட் மாடலை தழுவியதாக இருக்கும்.
 • அப்பாச்சி 200 பைக் இரு வேரியண்டில் விற்பனைக்கு வரலாம்.
 • 27 பிஎச்பி ஆற்றல் மற்றும் 24என்எம் டார்க் வழங்கும் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.
 • 0 முதல் 60 கிமீ வேகத்தினை 3.40 விநாடிகளில் எட்டும்.
 • 5 வேகம் அல்லது 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.
 • அப்பாச்சி 200 பைக்கின் கூலிங் சிஸ்டம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தால் உருவாகப்பட்டுள்ளது.
 • ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனல் வேரியண்டாக இருக்கும்.
 • மல்டி ஸ்போக் அலாய் வீல் பொருத்தப்பட்டிருக்கும்.
 • டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டரை கொண்டிருக்கும்.
 • அப்பாச்சி 180 போலவே முகப்பு விளக்கில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் இருக்கும்.
 • ஒரு இருக்கை மற்றும் ஸ்பிளிட் என இரு இருக்கை ஆப்ஷனில் இருக்க வாய்ப்பு உள்ளது.
 • வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 யில் சந்தைக்கு வரவுள்ளது.

 

டியூக் 200 பைக் 0-60 கிமீ வேகத்தினை எட்ட 3.50 முதல் 3.55 வரை எடுத்துக்கொள்ளுகின்றது. எனவே டியூக் 200 பைக்கினை விட வேகமாக அப்பாச்சி பைக் இருக்கும். கேடிஎம் டியூக் 200 பைக்கை விட மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மாடலாகவும் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் விளங்கும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 200 பைக் மிக இலகுவாக சந்தை மதிப்பினை பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது