டிவிஎஸ் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் வருகை ?

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் 110சிசி ஸ்கூட்டர் சந்தை பிரிவில் முன்னணி வகிக்கும் மாடலில் ஒன்றாக விளங்கும் ஜூபிடர் ஸ்கூட்டரின் அடிப்படையில் ஜூபிடர் 125 ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஜூபிடர் 125 ஸ்கூட்டர்

உலகின் அதிகம் விற்பனை ஆகின்ற ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவா மாடலுக்கு போட்டியாக இந்திய சந்தையில் சவலாக விளங்கும் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் மாடலை அடிப்படையாக கொண்ட புதிய டிசைன் மற்றும் என்ஜினை பெற்ற 125சிசி மாடல் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது 125சிசி சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆக்டிவா 12 மற்றும் ஆக்செஸ் 125 போன்ற மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட உள்ள 125சிசி என்ஜின் கொண்ட மாடல் 9 hp பவரை வெளிப்படுத்தக்கூடியதாகவும் சிறப்பான மைலேஜ் பெற்றதாகவும் விளங்கும்.

மேலும் இந்த ஸ்கூட்டரில் எல்இடி டெயில் விளக்கு , டிஜிட்டல் கிளஸ்ட்டர் , மொபைல் சார்ஜிங் போர்ட் , ட்யூப்லெஸ் டயர் ,சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற அம்சங்களை கொண்டதாக வரலாம்.

புதிதாக வரவுள்ள 125சிசி டிவிஎஸ் ஸ்கூட்டர் மாடல் ஜூபிடர் பிராண்டிலோ அல்லது புதிய பிராண்டில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் ஹீரோ நிறுவனத்தின் டேர் 125 ஸ்கூட்டர் மாடலும் விற்பனைக்கு வரலாம்.

 

இந்த வருடத்தின் இறுதியில்  ஜூபிடர் 125 விற்பனைக்கு வரலாம். மேலும் அடுத்த சில மாதங்களில் டிவிஎஸ் அகுலா 310 ஸ்போர்ட்டிவ் பைக் சந்தைக்கு வரவுள்ளது.

தகவல் உதவி ; ஆட்டோகார் ப்ரோ

Recommended For You