டிவிஎஸ் மோட்டார்ஸ் மொபைல் ஆப் அறிமுகம்

டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் டிவிஎஸ்எம் ( TVSM Mobile app ) என்ற பெயரில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கான ஸ்மார்ட் மொபைல் அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது. டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் TVSM ஆப் மூலம் பல தகவல்களை பெற இயலும்.

tvsm-app

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டிவிஎஸ்எம் ஆப்ளிகேஷன் வாயிலாக பல தகவல்கள் மற்றும் நிறைவான சேவை வழங்க டிவிஎஸ் திட்டமிட்டுள்ளது.

டிவிஎஸ்எம் (TVSM) சிறப்புகள் :

சர்வீஸ் காலஇடைவெளி – சர்வீஸ் நினைவுகூர்தல்

சர்வீஸ் முன்பதிவு – நாடு முழுதும் உள்ள 120 டீலர்கள் வாயிலாக முதற்கட்டமாக ஆன்லைன் சர்வீஸ் முன்பதிவு வசதியை பெற இயலும்.

சர்வீஸ் வரலாறு – உங்கள் இருசக்கர வாகனத்தின் சர்வீஸ் வரலாற்றை அறிய இயலும்.

வாரண்டி – வாகனத்தின் வாரண்டி விபரங்கள்

டீலர் இருப்பிடம் – டீலர்  உள்ள இடங்களை மேப் வாயிலாக தெரிந்து கொள்ள இயலும்.

டிப்ஸ் – மைலேஜ் குறிப்புகள் , வாகன பராமரிப்பு குறிப்புகள்

செய்திகள் – புதிய செய்திகள் மற்றும் முக்கிய தகவல்கள்

tvsm-app-spec

எரிபொருள் செலவு – எரிபொருள் நிரப்ப எவ்வளவு செலவு செய்கின்றோம் என்பதனை அறிய மிக எளிமையான கால்குலேட்டரை பெற்றுள்ளது.

நுட்பவிபரங்கள் – டிவிஎஸ் நிறுவன இருசக்கர வாகனங்களின் தொழிநுட்ப விபரங்கள்.

இந்த மொபைல் அப்ளிகேஷனை தரவிறக்க ; கூகுள் பிளே டிவிஎஸ்எம்