டிவிஎஸ் விக்டர் பைக் மீண்டும் வருகை

வரும் ஜனவரி 20ந் தேதி டிவிஎஸ் விக்டர் மற்றும் அப்பாச்சி 200 என இரண்டு மாடல்களை டிவிஎஸ் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. மேம்படுத்தப்பட்ட டிவிஎஸ் விக்டர் 110சிசி  மாடலும் வருகின்றது.

tvs-victor

இந்த வருடத்தில் டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி RTR 200 , விக்டர் மற்றும் XL 100 4 ஸ்டோர்க் என்ஜின் மொபட் போன்றவற்றை வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பார்வைக்கு கொட்டு வரவுள்ளது. இவற்றில் விக்டர் மற்றும் அப்பாச்சி 200 பைக்குகள் வரும் 20ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

2001 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த விக்டர் டிவிஎஸ் நிறுவனத்தின் மிக சிறப்பான பைக் மாடலாக விளங்கியது.  ஸ்டார் சிட்டி பைக்கின் புதிய தளத்தில் விக்டர் 110சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

சிறப்பான மைலேஜ் மற்றும் நல்ல செயல்திறன் வெளிப்படுத்தக்கூடிய வகையிலும் நவீன வசதிகளை பெற்ற மாடலாகவும் விகடர் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கும் விற்பனைக்கு வருகின்றது.