லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் அறிமுகம்

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட HSE வேரியண்ட் ரூ.56.50 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் என்ஜினில் TD4 & SD4 வேரியண்ட்கள் செப்டம்பர் 2015 முதல் விற்பனை உள்ளது.

Land -Rover-DISCOVERY-SPORT

 

டெல்லி மற்றும் கேரளா மாநிலத்தில் சில மாவட்டங்களில் தொடரும் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட டீசல் கார் விற்பனை மற்றும் பதிவுக்கு தடை போன்ற காரணங்களால் அனைத்து நிறுவனங்களும் பெட்ரோல் கார் மீது தங்களுடைய கவனத்தை திருப்பியுள்ளது.

[irp posts=”8063″ name=”100 டன் எடையுள்ள ரயிலை இழுக்கும் லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்”]

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆற்றல் 237 hp மற்றும் இழுவைதிறன் 340Nm ஆகும். இதில் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்இடம்பிடித்துள்ளது.

5 + 2 என மொத்தம் 7 இருக்கைகளை பெற்றுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் கார் 600மிமீ தண்ணீரிலும் மிக எளிதாக பயணிக்க முடியும் வல்லமை கொண்ட டிஸ்கவரி ஸ்போர்ட் காரில் சேறு , கல் , சகதி , ஜல்லி , மனல் என எவ்விதமான சாலைகளிலும் பயணிக்க இயலும். மேலும் 7 காற்றுப்பைகள் ரோல் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , ஹீல் டீஸன்ட் கன்ட்ரோல் ,டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் , எலக்ட்ரானிக் டிராக்‌ஷன் கன்ட்ரோல் போன்ற சிறப்பம்சங்கள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது.

8 இஞ்ச் தொடுதிரை அமைப்பு , 17 ஸ்பீக்கர்களை கொண்ட பிரிமியம் மெரிடியன் சவூண்ட் சிஸ்டம் , பின்புற இருக்கைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் போன்ற பல விதமான நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

[irp posts=”2760″ name=”லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வந்தது”]

 

லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் பெட்ரோல் விலை ரூ.56.50 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)