டெல்லியில் டீசல் கார் தடை தொடரும் : உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் டெல்லியில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட டீசல் கார் தடை நீக்க முடியாது என தெரிவித்துள்ளது. மஹிந்திரா , டாடா , டொயோட்டா மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன.

மஹிந்திரா எக்ஸ்யூவி500

 

டெல்லியில் டீசல் கார்கள் பதிவு செய்ய மார்ச் மாதம் வரை இடைக்கால தடை விதிக்கப்படிருக்கும் நிலையில் இந்த தடையை ரத்து செய்ய வேண்டி தொடரப்பட்ட மேல் முறையீடு மனுவை நீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது . ஆனால் டெல்லியில் டீசல் கார் தொடரும் என கூறியுள்ளது.

பெட்ரோல் வாகனங்களை விட குறைவாக டீசல் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகின்றது என்றால் ஆதாரத்துடன் நீருபிக்கும்படி உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.  மிக கடுமையாக சுற்றுச்சூழல் மாசுபாட்டினை குறைக்கும் நோக்கில் மீக தீவரமாக டெல்லி அரசு ஈடுபட்டு வருகின்றது.

மேலும் டெல்லியில் கனரக வர்த்தக வாகனங்கள் தேசிய நெஞ்சாலை எண் 2, 10, 58 ஆகிய வழிகள், மாநில நெடுஞ்சாலை 57 என நான்கு வழிகளிலும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய நெஞ்சாலை எண் 1, 8 வழிகளில் நுழைவு கட்டணமாக ரூ1400 முதல் ரூ.2600 வரையில் உயர்த்தியுள்ளது.

மேலும் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் முறையும் டெல்லியல் கடந்த ஜனவரி 1 , 2016 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நடைமுறையில் வாகனங்கள் இயக்கப்படுவதனால் மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது.

Share