டொயோட்டா ஃபார்ச்சூனர் 1 லட்சம் கார்கள் விற்பனை சாதனை

0

இந்தியாவின் பிரபலமான பிரிமியம் எஸ்யூவி கார் மாடலான டொயோட்டா  1 லட்சம் ஃபார்ச்சூனர் கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சமீபத்தில் புதிய தலைமுறை ஃபார்ச்சூனர் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையில் உள்ள டொயோட்டா பார்ச்சூனர் பிரிமியம் ரக எஸ்யூவி கார் சந்தையில் முன்னனி எஸ்யூவி மாடலாக வலம் வந்து கொண்டிருக்கின்றது. நவம்பர் 2016யில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்த சில வாரங்களிலே அமோக வரவேற்பினை பெற்று 6000 முன்பதிவுகளை கடந்தது. இதுவரை 2000 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 5000 கார்கள் டெலிவரி கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

மேலும் படிக்க ; டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் விபரம்

பார்ச்சூனர் 1 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள N. ராஜா (நிர்வாகி மற்றும் மூத்த துனை தலைவர் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு தலைவர்- டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டார் ) வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவினால் மட்டுமே இந்த விற்பனை இலக்கினை அடைய முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டொயோட்டா நிறுவனம் தங்களுடைய அனைத்து கார் மாடல்களின் 3 சதவீத விலை உயர்வினை ஜனவரி 2017 முதல் அமல்படுத்த உள்ளது.