டொயோட்டா இன்னோவா காரின் முக்கிய விபரங்கள் – 2016 – updated

0
2016ம் ஆண்டின் டொயோட்டா இன்னோவா கார் வரும் 23ந் தேதி இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. டொயோட்டா இன்னோவா கார் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா இன்னோவா
டொயோட்டா இன்னோவா 

தோற்றம் மட்டுமல்லாமல் உட்புறம் மற்றும் புதிய என்ஜின் கூடுதல் வசதிகள் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டு ஆப்ஷனிலும் புதிய டொயோட்டா இன்னோவா வரவுள்ளது.

டொயோட்டா இன்னோவா


முற்றிலும் தோற்றத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ள டொயோட்டா இன்னோவா காரின் முகப்பில் மிக அகலமான ஸ்லாட்களுடன் டொயோடா லோகோ பதிக்கப்பட்டுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகளில் பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள் மற்றும் எல்இடி நிறுத்த விளக்குகளை பெற்று விளங்குகின்றது.

புதிய இன்னோவா காரின் நீளம் 4735மிமீ அகலம் 1830மிமீ மற்றும் உயரம் 1795மிமீ ஆகும் . இது தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட 180மிமீ நீளம் , 60மிமீ உயரம் மற்றும் 45மிமீ அகலம் போன்றவை கூடுதலாகும். ஆனால் வீல்பேஸ் 2750மிமீ சமமாக உள்ளது.

இன்னோவா

புதிய ஃபார்ச்சூனர் காரின் டேஸ்போர்டு தோற்றத்தினை இன்னோவா காரும் பெற்றுள்ளது. இரட்டை வண்ண கலவையில் உள்ள இன்டிரியரில் டேஸ்போர்டில் மரவேலைப்பாடு தோற்றத்தினை வழங்கும் ஃபேக்ஸ் அலுமினியத்தினை பெற்றுள்ளது.

ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் , லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி , 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பூளூடூத் தொடர்பு , கூல்டு க்ளோவ் பாக்ஸ் என பல நவீன வசதிகளை பெற்றுள்ளது.

டொயோட்டா இன்னோவா

இன்னோவா என்ஜின்

இன்னோவா காரில் 147 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

பாதுகாப்பு

அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரட்டை காற்றுப்பைகளை பெற்றிருக்கும். ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை நிரந்தர அம்சமாக இருக்கும். டாப் வேரியண்டில் 6 காற்றுப்பைகளை பெற்றிருக்கும்.

இன்னோவா
இன்னோவா

விலை

புதிய டொயோட்டா இன்னோவா கார் விலை விற்பனையில் உள்ள மாடலை விட ரூ.1 லட்சம் வரை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2016 இன்னோவா எம்பிவி: புதிய டொயோட்டா இன்னோவா சொகுசு கார்களை மிஞ்சும் சொகுசு தன்மையை பெற்று விளங்குகின்றது. புதிய இன்னோவா இந்திய சந்தையில் வரும் 2016ம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

All New Toyota Innova MPV details