டொயோட்டா சிறிய ரக கார்கள் வருகை விபரம்

0

டொயோட்டா என்றால் தரம் என்பதனை அனைவருமே அறிந்துள்ள நிலை டொயோட்டா மற்றும் டைஹட்சூ இணைந்து அதிக மைலேஜ் , பாதுகாப்பு தரம் மற்றும் குறைந்த விலை கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா நிறுவனத்தின் அங்கமான டைஹட்சூ பிராண்டு குறைந்த விலை கார்களை பல்வேறு நாடுகளில் விற்பனை செய்து வருகின்றது. மிக வேகமாக வளர்ந்து வரும் குறைந்த விலை சந்தைக்கு ஏற்ற மாடல்களை தயாரிக்க டொயோட்டா மற்றும் டைஹட்சூ இணைந்து ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கியுள்ளது. வளரும் நாடுகளை குறிவைத்து தயாரிக்கப்பட உள்ள இந்த Emerging-market Compact Car Company என இரு நிறுவனங்களின் செயல்திட்டத்தை கொண்டு உருவாக்கப்பட்ட உட்புற நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆனது ஒவ்வொரு நாட்டின் சந்தைகளுக்கு ஏற்ப மாடல்களை அறிமுகப்படுவதற்கான முயற்சிகளை தொடங்க உள்ளது.

இந்தியாவில் சிறிய கார் தயாரிப்பில் முன்னனியில் இருக்கும் மாருதி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்களுக்கு மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தும் வகையிலும் அதிக எரிபொருள் சிக்கனம் , மிகவும் தரமான கட்டமைப்பு மற்றும் சவாலான விலையிலும் இந்த மாடல்கள் அமையலாம்.

பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதி நடைமுறைக்கு வரும் பொழுது இந்திய சந்தையில் சிறிய ரக கார்களை டொயோட்டா பிராண்டிலோ அல்லது டைஹட்சூ பிராண்டிலோ விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் பிஎஸ் 6 மாசு விதிகள் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டைஹட்சூ D-Base கான்செப்ட் படங்கள்

[foogallery id=”14417″]