டொயோட்டா – சுஸூகி கூட்டணி

0

உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டொயோட்டா மற்றும் சுஸூகி நிறுவனமும் இணைந்து எதிர்கால ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்கள் ,  நுட்பங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு மெகா கூட்டணியை அமைத்துள்ளனர்.

Google News

டொயோட்டா-சுஸூகி

 

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் மற்றும் சுஸூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனங்களுக்கு இடைய ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக எதிர்கால ஆட்டோமொபைல் சந்தைக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சங்கள் , சுற்றுச்சூழல் சார்ந்த அம்சங்கள் மேலும் இரு நிறுவனங்களும் மாடல்கள் மற்றும் உதிரிபாகங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஒப்பந்தத்தை வகுத்துள்ளது.

இரு நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உடன்படிக்கையின் வாயிலாக மிகவும் சவாலான விலையில் ஹைபிரிட் மாடல்கள் மற்றும் பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை மேம்படுத்தப்படலாம் என கருதப்படுகின்றது.

Suzuki ignis motocrosser

இதுகுறித்து கருத்து தெரிவித்த டொயோட்டா தலைவர் அகியோ டொயோடா (Akio Toyoda) சுஸூகி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ள நிலையில் நன்றி தெரிவிப்பதுடன் இந்த கூட்டணி வாயிலாக கூடுதலாக பல தகவல்களை டொயோட்டா கற்கவும் , சிறப்பான அனுபவத்தினை வழங்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சுஸூகி தலைவர் ஒசாமு சுஸூகி கூறுகையில் டொயோட்டா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதன் வாயிலாக மேம்பட்ட நுட்பங்களை அறிய உதவும் என தெரிவித்துள்ளார்.