டொயோட்டா மினி எஸ்யூவி திட்டம்

0
டொயோட்டா நிறுவனம் மினி எஸ்யூவி காரை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது. மேலும் சிறிய ரக கார்களை உருவாக்கும் எண்ணத்திலும் உள்ளதாம். மிக பெரும் வரவேற்பினை பெற்று வரும் மினி எஸ்யூவி சந்தையை குறிவைத்து டொயோட்டா களமிறங்க உள்ளது.

டொயோட்டா இன்னோவா விற்பனை கடந்த சில மாதங்களாகவே சரிவினை சந்தித்து வருகின்றது. இந்தியாவின் டொயோட்டா விற்பனையில் பெரும்பங்கு இன்னோவையே சாரும்.
டொயோட்டா
எடியாஸ் மற்றும் லீவா போன்ற கார்களும் மிக பெரும் வரவேற்பினை பெற தவறியுள்ளது. சிறிய ரக கார்களில் லீவா மட்டுமே இந்தியாவில் உள்ளது. மேலும் ஒரு சிறிய ரக காரை மற்றும் மினி எஸ்யூவி கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.
இந்தியாவில் டீசல் எஞ்சின் தயாரிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதற்க்காக இந்தியாவின் எதிர்கால கொள்கைகளை பொருத்து இந்தியாவில் டீசல் எஞ்சின் ஆலையை உருவாக்கும்.
மினி எஸ்யூவி பற்றி அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்களும் சிந்திக்க காரணம் டஸ்ட்டர், வரப்போகின்ற ஈக்கோஸ்போர்ட் ஆகியவை காரணம்.