டொயோட்டா C-HR எஸ்யூவி இந்தியா வருகை விபரம்

0

சர்வதேச அரங்கில் உயர்ந்து வரும் க்ராஸ்ஓவர்/எஸ்யூவி கார்களின் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ள டொயோட்டா C-HR எஸ்யூவி மிகவும் ஸ்டைலிசான தோற்ற அமைப்புடன் 15 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது.

Toyota C HR suv

Google News

டொயோட்டா C-HR

டொயோட்டா நிறுவனத்தின் பிரியஸ் காரின் டிஎன்ஜிஏ (Toyota’s New Global Architecture – TNGA) தளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள டொயோட்டா சி ஹெச்ஆர் எஸ்யூவி இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள க்ரெட்டா , டூஸான் , எக்ஸ்யூவி 500 போன்ற மாடல்களுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்தும்.

Toyota C HR front

[clickToTweet tweet=”டொயோட்டா சி-ஹெச்ஆர் என்றால் கூபே ஹைரைடர் , C-HR Stands for Coupe High Rider ” quote=”டொயோட்டா சி-ஹெச்ஆர் என்றால் கூபே ஹைரைடர் , C-HR Stands for Coupe High Rider” theme=”style3″]

Toyota C HR interior dashboard

ஜப்பான் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள சி-எச்ஆர் காரில்  1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின், 1.5 லிட்டர், 1.8 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என மொத்தம் 4 விதமான தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இந்திய சந்தையில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் கூடுதலாக டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் சேர்ந்து விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவில் 2018 ஆம் ஆண்டின் மத்தியில் டொயோட்டா CH-R விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Toyota C HR right side

Toyota C HR rear three quarters

Toyota C HR rear