ட்ரான்ஸ்பார்மர் – 02 (21-10-2012)

0
ஆட்டோமொபைல் செய்திகளின் தொகுப்பு. ஆட்டோமொபைல் உலகின் முக்கிய நிகழ்வுகளை கான்போம்….

1. டாடா நானோ(Tata nano) சிறப்பு பதிப்பு வெளிவந்துள்ளது. 25,000 மதிப்புள்ள துனை பொருட்கள் கிடைக்கும் அவை ஆலாய் வீல்ஸ்,ஆடியோ சிஸ்டம்,ஸ்டிக்கர் மற்றும் குலோவ் பாகஸ்.ஆனால் இந்தியா முழுமைக்கும் அல்ல சில மாநிலங்களுக்கு மட்டும் அவை மேற்கு வங்காளம், கர்நாடகம், குஜராத், அசாம், மாஹாராஷ்ட்ரா, கோவா,கேரளா, சீக்கிம்,அருனாசலப்பிரதேசம், நாகலாந்து,மனிப்புர், மீசாரம் மற்றும் திரிபுரா.
2.மஹிந்திரா ஸ்கார்பியா(Mahindra Scorpia) நீங்க வச்சிருந்தா பத்திரமா பாத்துக்கங்க. மஹிந்திரா ஸ்கார்பியா  கார்தான் அதிகளவில் திருடப்படுகிறதாம். இந்த அறிக்கை மும்பை மாநகரத்தினை அடிப்படையாகக் கொண்டது.
3. பைக் விரும்பிகளில் பலர் விரும்பும் ராயல் என்பீல்டு(Royal Enfield) விற்பனை கடந்ந சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில் 53,000 பைக்கள்,2011 ஆம் ஆண்டில் 75,000 பைக்கள் 2012 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,00,000 நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4.  ராயல் என்பீல்டு(Royal Enfield) பைக்களின் அனிவகுப்பு விரைவில் வர உள்ளது. அவை Royal Enfield 500, Royal Enfield 350 மற்றும் Royal Enfield Cafe racer 500.
cafe racer 500
5. மாருதி ஆல்டோ 800 கார் ஒரே டீலர்(கேரளா மாநிலத்தில்) மூலம்  200 கார்கள் டெலிவரி செய்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம்.
6. டாடா நிறுவனத்தின் டாடா சுப்பர் ஏஸ் தென் ஆப்பரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7.இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராரான கபில் தேவ் புதிய ப்ரோஸ்ச் பனாமாரா(PORSCHE PANAMERA DIESEL) வாங்கி உள்ளார். இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 242km/h
8. பஜாஜ் நிறவனம் KTM DUKE 200 பைக்கள் விரைவில் புதிய வண்ணங்களில் வர உள்ளது.அவை வெள்ளை மற்றும் கருப்பு. பழைய வண்ணம் ஆரஞ்சு.