வருகின்ற ஜனவரி 2017 முதல் இந்தியாவின் நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்வினை சந்திக்கின்றது. இவற்றில் ரெடி-கோ மற்றும் மைக்ரா மாடலும் அடங்கும்.
இந்தியா நிசான் மற்றும் டட்சன் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள நிசான் உயர்ந்து வரும் உற்பத்தி செலவினை ஈடுகட்டும் நோக்கிலே விலை உயர்வினை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிசான் நிறுவனம் இந்தியாவில் மைக்ரா மைக்ரா ஏக்டிவ் , சன்னி , டெரானோ எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்டிவ் ஜிடி-ஆர் போன்ற கார்களை விற்பனை செய்து வருகின்றது. நிசான் குழுமத்தின் பட்ஜெட் பிராண்டான டட்சன் இந்தியாவில் கோ ,கோ + மற்றும் ரெடி-கோ போன்ற மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
விரைவில் நிசான் நிறுவனம் எக்ஸ்-ட்ரெயில் ஹைபிரிட் எஸ்யூவி மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. ரெடி-கோ வரவுக்கு பின்னர் நிசான் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.
சமீபத்தில் டொயோட்டா ,ரெனோ , டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் விலை உயர்வினை அறிவித்துள்ளதை தொடர்ந்து நிசான் மற்றும் டட்சன் கார்களின் விலை அதிகபட்சமாக ரூ.30,000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.