நிசான் GT-R ஸ்போர்ட்ஸ் கார் இந்தியா வருகை

0
நிசான் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான GT-R ஸ்போர்ட்ஸ் கார் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவிற்க்கு வருகின்றது. நிசான் GT-R ரூ. 2 கோடி விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.

நிசான் GT-R

முழுதும் கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் நிசான் GT-R பல உலக பிரபலங்களின் காரஜ்களில் இடம்பெற்ற உள்ள மாடலாகும். சேவை தரத்தினை உயர்த்துவதற்க்கும் நாட்டிலுள்ள அனைத்து நிசான் டீலர்களிலும் ஸ்போர்ட்ஸ் காரினை பராமரிப்பதற்க்கான சிறப்பான டெக்னிஷன் தேவை என்பதால்   ஜிடி-ஆர் கார் விற்பனை தள்ளிவைத்துள்ளது.

நிசான் ஜிடி-ஆர் சூப்பர் கார்
நிசான் ஜிடி-ஆர் சூப்பர் கார்

நிசான் ஜிடி-ஆர் கார்களை பராமரிப்பு  சேவைகளுக்காக தனது டீலரின் அடிப்படை வசதிகள் மற்றும் கட்டுமானத்தை மேம்படுத்த உள்ளது. மேலும் 4 மாதம் வரை பயற்சி தேவைப்படும் என்பதால் இதற்க்காக ஒவ்வொரு டீலரிடமும் ஒரு திறமையான பணியாளர் இருப்பதனை அவசியமாக கருதுகின்றது.

Google News

ஆல்வீல் டிரைவ் கொண்ட இந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் காருக்கு ஹை ஆக்டேன் எரிபொருள் கொண்டுதான் இயக்க முடியும். மிக சிறந்த 4 பொறியாளர்களால் கைகளால் வடிவமைக்கப்படும் இந்த என்ஜின் 545பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.8 லிட்டர் வி6 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும் இதன் முறுக்கு விசை 627என்எம் ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 2.8 விநாடிகள் மட்டுமே தேவைப்படும்.

 ஜாகுவார் F டைப் , போர்ஷே 911 , ஆடி ஆர்8 போன்ற கார்களுக்கு நிசான் ஜிடி-ஆர் சூப்பர் கார் சவாலினை தரவுல்லது. வரும் டிசம்பர் மாதம் இந்தியவிற்க்கு வருகின்றது.

நிசான் GT-R
நிசான் ஜிடி-ஆர் சூப்பர் கார்

Nissan GT-R Super car to be launched in India