நேதாஜி பயன்படுத்திய காரை புதுப்பிக்கும் ஆடி

2 Min Read

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வீட்டு காவிலில் இருந்த பொழுது தப்பி செல்வதற்கு பயன்படுத்திய 4 கதவுகளை கொண்ட ஜெர்மன் வான்டேரர் செடான் காரினை புதுப்பிக்கும் பணியை ஆடி நிறுவனம் தொடங்க உள்ளது.

இந்தியா தேசிய ராணுவத்தை உருவாக்கி ஆங்கிலேய ஏகாபத்திய ஆட்சிக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்திய நேதாஜி அவர்களை வீட்டு காவலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கோல்கத்தாவில் அடைத்திருந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாறுவேடத்தில் தப்பிசென்றார். நேதாஜி தப்பிசெல்ல அவரது உறவினர் சிசார் போஸ் என்பவர் உதவி செய்துள்ளார். இந்த காரை நேதாஜி கோல்கத்தா முதல் கோமோ வரை ஓட்டிசென்று தப்பித்துள்ளார்.

BLA 7169 என்ற பதிவெண்ணை கொண்டுள்ள 4 டோர் ஜெர்மன் வான்டேரர் காரின் பெயின்ட் , பழைய பாகங்களை மாற்றி புதிய பாகங்களை சேர்ப்பது போன்றவற்றை புதுப்பித்து குறைந்த தூரத்தில் மட்டும் அதாவது 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை இயக்கும் வகையில் மறுஉருவாக்கம் செய்யப்படுதவதாக  நேதாஜி ஆராய்ச்சி அமைப்பு செயலாளர் கார்திக் தெரிவித்துள்ளார்.

இந்த காரினை 1971 ஆம் ஆண்டு வரை நோதாஜி மூத்த சகதோரர் சிசார் போஸ் பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பிறகே பயன்பாடு இல்லாமல் நேதாஜி பவனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வான்டெரர் W24

கடந்த 1937 ஆம் ஆண்டு வான்டெரர் W24 காரினை வான்டெரர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  வான்டெரர் W24 காரில் 4 சிலிண்டர் கொண்ட 1767 cc எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 42 hp ஆகும். இதில் பவரை எடுத்துசெல்வதற்கு 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ளது.  1937 ஆம் ஆண்டில் சிசார் போஸ் தந்தை சரத் சந்திர போஸ் வாங்கி தன்னுடைய மகன் சிசார் போஸ் பெயரில் பதிவு செய்யதுள்ளார். சிசார்போஸ் இந்த காரினை 1971 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பராமரித்து இயக்கி வந்துள்ளார்.

பிரசத்தி பெற்ற சொகுசு கார் தயாரிப்பாளரான ஆடி நிறுவனம் புதுப்பிக்கும் பணியை தொடங்கியுள்ள நிலையில் முழுமையாக காரை புதுப்பித்து பயன்பாட்டுக்கு டிசம்பர் மாதம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Share This Article
Follow:
நான் MR.Durai B.E (Mechanical). கடந்த 12 ஆண்டுகளாக கார், பைக் தொடர்பான செய்திகளை வழங்குவதிலும் மற்றும் விமர்சகராக ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் தலைமை செய்தியாளராக பணி செய்து வருகிறேன்.