பவர்ஃபுல்லான டாடா டியாகோ ஸ்போர்ட் கார் வருகை

டாடா மோட்டார்சின் டியாகோ கார் சிறப்பான வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து டாடா டியாகோ ஸ்போர்ட் வெர்ஷனில் சக்திவாய்ந்த ஹேட்ச்பேக் மாடலை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

முதன்முறையாக டாடா போல்ட் மாடலில் போல்ட்  ஸ்போர்ட் மாடலை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த டாடா 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மற்றும் சில சர்வதேச ஆட்டோ ஷோக்களிலும் காட்சிப்படுத்தியது. ஆனால் போல்ட் எதிர்பார்த்த வெற்றி பெறாத காரணத்தால் போல்ட் ஸ்போர்ட் மாடலை கைவிட்டுள்ளது.

போல்ட் காரில் இடம்பெற்றுள்ள 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்ஜின் டியாகோ காரில் இடம்பெறாமல் தற்பொழுது விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் 3 சிலிண்ட்ர் ரெவோட்ரான் எஞ்ஜினில் கூடுதலாக டர்போசார்ஜரை பெற்று நெக்ஸான் எஸ்யூவி காரில் 105 hp ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்ஜினாக இடம் பெற உள்ளது. ஆனால் டியாகோ ஸ்போர்ட் காரில் இதே எஞ்ஜின்  பெரிய டர்போசார்ஜர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கருவிகளுடன் துனையுடன் 120 hp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

டியாகோ ஸ்போர்ட் அல்லது டியாகோ ப்ளஸ் கார் மிகவும் சக்திவாய்ந்த மாடலாகவும் , மைலேஜ் மற்றும் விலை போன்றவற்றில் மிக சவலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபியட் புன்ட்டோ அபாரத் மற்றும் வரவுள்ள பலேனோ ஆர்எஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாகவும் அவற்றை விட சவாலான விலையில் அமையும் வாய்ப்புகள் உள்ளது.

Exit mobile version